நாம் விரும்பி அணியும் வெள்ளி கொலுசு மற்றும் கால் மெட்டி அடிக்கடி கறுத்து போய் விடும். குறிப்பாகக் குளிர்காலத்தில் கறுத்து போவது அதிகம் நடக்கும். உங்கள் வெள்ளி நகைகள் பழைய பளபளப்பை இழந்திருந்தால், சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் அதை மீட்கலாம். அது எப்படி என விரிவாக பார்ப்போம்.
வெள்ளி கொலுசு புத்தம் புதுசு போல் ஜொலிக்க டிப்ஸ்
உங்கள் கொலுசு அல்லது மெட்டி பளபளப்பை இழந்திருந்தால், பேக்கிங் சோடா உதவும். ஒரு பாத்திரத்தில் சிறிது வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து தடிமனான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை மென்மையான துணி அல்லது பிரஷ் மூலம் நகையில் தடவவும். சில நிமிடங்கள் விட்டு, பின்னர் மெதுவாகத் தேய்க்கவும். இது அழுக்கு மற்றும் கறைகளை நீக்கி, வெள்ளிக்கு மீண்டும் பளபளப்பைக் கொடுக்கும்.