காய்கறிச் சாறு மற்றும் பழக்கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தை விரட்ட பேக்கிங் சோடா கைக்கொடுக்கும். 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்த கலவையால் பெட்டியைத் துடைக்கலாம். பிடிவாதமான கறைகளை மெதுவாகத் தேய்த்து அகற்றிய பின், சோப்பின் எச்சங்கள் போக சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.
பெட்டியின் கைப்பிடிகள், மூலைகள் மற்றும் சிறிய இடைவெளிகளில் அழுக்குகள் எளிதில் ஒளிந்துகொள்ளும். இவற்றைச் சுத்தம் செய்ய பழைய டூத் பிரஷ் அல்லது மென்மையான பிரஷைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம். கடினமான கறைகள் மீது சோப்பு நீரைத் தடவி ஊறவிட்ட பிறகு தேய்க்கலாம். ஆனால் கூர்மையான பொருட்களைக் கொண்டு சுரண்டக் கூடாது.
டிராயரை மட்டும் கழுவிவிட்டு அப்படியே வைத்துவிட முடியாது. அது அமரும் பிரிட்ஜின் அடிப்பகுதி, பக்கவாட்டுச் சுவர்களிலும் அழுக்குகள் படிந்திருக்க வாய்ப்புள்ளது. வெதுவெதுப்பான சோப்பு நீரால் அந்த இடங்களைத் துடைத்துவிட்டு, பின்னர் ஈரத்துணியால் சுத்தப்படுத்த வேண்டும்.
இந்தச் செயல்பாட்டின்போது பிரிட்ஜின் மின்சாரப் பகுதிகள் மற்றும் காற்றோட்டத் துளைகளுக்குள் தண்ணீர் புகாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். உலர்ந்த துணியைக் கொண்டு மீதமுள்ள ஈரப்பதத்தையும் முழுமையாகத் துடைத்து எடுக்க வேண்டும்.