Dosa Tawa Cleaning Tips : தோசைக் கல் ஓரமா பிசுபிசுப்பு? ஒரு நிமிடத்தில் கிளீன் பண்ண சூப்பர் ட்ரிக்

Published : Jul 02, 2025, 10:59 AM IST

தோசை கல் ஓரத்தில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறை மற்றும் பிசுபிசுப்பை சுலபமாக நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
தோசை கல்லை சுத்தம் செய்யும் முறை

நம் இந்திய பலரது வீடுகளில் தினமும் தோசை சுட்டு சாப்பிடாத நாட்களே இருக்காது என்று சொல்லலாம். மொறு மொறுப்பான தோசையுடன் சுட சுட சாம்பார் வைத்து சாப்பிடுவது பற்றி சொல்லவா வேண்டும்? ஆனால் நாளாக நாளாக தோசைக்கல்லின் ஓரங்களில் எண்ணெய் பிசுபிசுப்பும், விடாப்பிடியான கறையும் படிந்திருக்கும். இதை கை வலிக்க வலிக்க சோப்பு போட்டு தேய்த்தால் கூட நீங்காது. ஆனால் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தோசைக்கல்லில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறை மற்றும் பிசுபிசுப்பை சுலபமாக நீக்கிவிடலாம். அவை என்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

25
கல்லை சூடு படுத்தவும் :

தோசை கல்லை சுத்தம் செய்ய முதலில் கல்லை மிதமான தீயில் வைத்து சூடாக்க வேண்டும். 2-3 நிமிடங்கள் மட்டும் சூடாக்கினால் போதும். தோசை கல்லை இப்படி சூடுப்படுத்தினால், கல்லில் படிந்திருக்கும் விடப்படியான கறை மற்றும் எண்ணெய் கொஞ்சமாக இலகுவாகும்.

35
தோசை கல்லை சுத்தம் செய்ய கலவை :

தோசை கல்லை அடுப்பில் இருந்து இறக்கியதும் அதன் மீது இரண்டு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் சமையல் சோடா, பிறகு அரை எலுமிச்சை பழத்தை சேர்ந்த கலவையை ஊற்ற வேண்டும். இந்த கலவையானது தோசை கல்லில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறையை எளிதாக உடைத்து விடும்.

45
இப்படி தேய்க்கவும் :

இப்போது எலுமிச்சை தோலை கொண்டு கறை படிந்திருக்கும் இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். வேண்டுமானால் தேங்காய் நார் அல்லது ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்தலாம். உப்பு, சோடா மற்றும் எலுமிச்சை ஆகிய மூன்றும் சேர்ந்து கல்லில் படிந்திருக்கும் பிசுபிசுப்பை சுலபமாக நீக்கிவிடும்.

55
கழுவும் முறை :

இப்போது தோசை கல்லை பாத்திரம் கழுவும் சோப் அல்லது லிக்விட் கொண்டு கழுவினால், உங்களது பழைய தோசைக்கல் புதுசு போல பளபளப்பாக மாறி இருப்பதை நீங்களே பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

குறிப்பு : வாரத்திற்கு ஒரு முறை தோசை கல்லை இப்படி நீங்கள் சுத்தம் செய்தால் கை வலிக்காமல் சுத்தம் செய்து விடலாம். இந்த டிப்ஸ் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள், உங்களது தோசைக்கல் எப்போதுமே பளபளக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories