
வீட்டில் வெப்பத்தை தவிர்க்க மின்விசிறிகள், ஏசிகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை அழுக்காகிவிட்டால் அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மின்விசிறியை சுத்தம் செய்வது ரொம்பவே கஷ்டமான வேலை. அது சீலிங் ஃபேனாக இருந்தாலும் சரி, டேபிள் பேனாக இருந்தாலும் சரி. எனவே இந்த பதிவில் மின்விசிறியை சுத்தம் செய்வதற்கு உதவியாக இருக்கும் சில குறிப்புகளை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் அழுக்கு படிந்து கருப்பாக இருக்கும் உங்களது பேனை மிகவும் எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
அழுக்கு படிந்து கருப்பாக இருக்கும் உங்கள் பேனை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை மற்றும் உப்பை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் உங்களது பேனை துணி அல்லது துடைப்பம் கொண்டு அதில் இருக்கும் தூசிகளை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்கவும். பிறகு அதை ஃபேன் மீது தெளிக்கவும். சிறிது நேரம் கழித்து சுத்தமான துணியை தண்ணீரில் அதை வைத்து பேனை துடைக்க வேண்டும்.
இதையும் படிங்க: இனி Ceiling Fan கிளீன் பண்ண கஷ்டப்பட வேண்டாம்; ரொம்பவே ஈஸி.. டிப்ஸ் இதோ!
பேனில் இருக்கும் கருமையை போக்க வினிகர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதை முறையாக பயன்படுத்தினால் பேனில் இருக்கும் கருமை நீங்குவது மட்டுமின்றி, பேன் பளபளப்பாகவும் இருக்கும். இதற்கு முதலில் சேனல் இருக்கும் தூசியை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள் பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இரண்டு ஸ்பூன் வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதை சான் மீது தெளித்து இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு ஈரமான துணி கொண்டு பேனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவி காயவைத்து பயன்படுத்தவும்.
இதையும் படிங்க: 10 நிமிஷம் தான்.. இனி Table Fan கிளீன் பண்றது ரொம்பவே ஈஸி..!!
வினிகர் மற்றும் பேக்கிங் சோடா எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மந்திர பொருட்கள் ஆகும். இவை எப்பேர்ப்பட்ட அழுக்குகள் மற்றும் தூசிகளை சுலபமாக அகற்றி விடும். இப்போது பனை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இப்போது ஃபேனில் இருக்கும் தூசியை நன்றாக சுத்தம் செய்து தயாரித்து வைத்த இந்த கலவையை ஒரு பிரஷ் கொண்டு பேனில் பயன்படுத்தவும். சிறிது நேரம் கழித்து ஈரமான துணி கொண்டு துடைக்கவும். நன்கு காய்ந்த பிறகு பயன்படுத்தவும்.