வெறும் 10 நிமிடம்! ஏசியை இப்படி கிளீன் பண்ணுங்க.. காத்து ஜில்லுனு வரும்!
ஏசியை எப்படி சுத்தம் செய்தால் காற்று சில்லுனு வரும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஏசியை எப்படி சுத்தம் செய்தால் காற்று சில்லுனு வரும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Step-by-Step Guide to Cleaning Your Air Conditioner : கோடைகாலம் ஆரம்பமாகி விட்டதால் ஏசி பயன்படுத்து வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல மாதங்கள் பயன்படுத்தாததால், தூசிகள் மற்றும் பூச்சிகள் அதில் இருக்கும். எனவே அதை கண்டிபாக சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான சில குறிப்புகள்.
உண்மையில், பெரும்பாலான வீடுகள் ஏப்ரல், மே மாதங்களில் ஏசியை நம்பி இருப்பார்கள். ஆனால் சில மாதங்கள் அதை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விட்டதால் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில், அதில் தூசி அழுக்கு மற்றும் பூச்சிகள் கூட குவிந்து இருக்கும். இதனால் அடைப்புகள், சேதம் மற்றும் குறைந்த செயல்பாடு ஏற்படும்.
இதையும் படிங்க: ஏசி ஓடிக்கிட்டே இருந்தாலும் EB பில் கம்மியா வரணுமா? இதை மட்டும் செய்யுங்க!
ஏசியை சுத்தம் செய்வதற்கு முன் முதலில் பாதுகாப்பதுடன் செய்ய ஏசி யூனிட்டிற்கான மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஏசியை கூலாக பராமரிக்கும் டிப்ஸ்!! கோடை வெயில்ல 'இதை' பண்றது முக்கியம்
ஏசியில் இருக்கும் முன் பலகத்தை திறந்து அதில் காற்று வடிகட்டியை கண்டறிந்து அதில் படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்குகள் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு அதை அகற்றி ஓடும் நீரில் கீழ் வைத்து நன்கு கழுவ வேண்டும். பிறகு அதை வெயிலில் நன்கு காய வைத்த பிறகு மீண்டும் அதை இருந்த இடத்தில் மாற்ற வேண்டும். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் வழக்கமாக இதை நீங்கள் சுத்தம் செய்து வந்தால் அதிலிருந்து வரும் காற்று சில்லென்று இருக்கும் மற்றும் தூசி படிவதும் தடுக்கப்படும்.
ஏசியை பயன்படுத்த பயன்படுத்த அதன் வெளிப்புறமானது வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். அதன் பழைய நிறத்தை மீண்டும் பெற தண்ணீரில் சிறிதளவு வினிகர் கலந்து அதை ஒரு துணியால் துடைக்க வேண்டும்.
ஏசியை சுத்தம் செய்வதற்கு முன் ஒரு பிரஷில் துணியை சுற்றி அதை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் இப்படி செய்தால் உள்ளே இருக்கும் எந்த கம்பிகளும் உடையாமல் அப்படியே இருக்கும்.