குழந்தைகளுக்கு வெள்ளை முடி வர 'இப்படி' ஒரு காரணமா? உடனே கவனிங்க!!!
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வெள்ளை முடி வர காரணம் என்ன என்பதை பற்றியும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வெள்ளை முடி வர காரணம் என்ன என்பதை பற்றியும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Reasons For Grey Hair For Kids : முடி நிறைத்தல் பெண்கள் மற்றும் ஆண்களை மட்டுமல்ல இப்போது சின்ன குழந்தைகளும் உன் கூட இதற்கு பலியாகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஏதேனும் கடுமையான நோய் காரணமாக முன்கூட்டியே முடி நரைக்கலாம். இப்போது எல்லாம் நம்முடைய உணவு பழக்கம் மாறிவிட்டது. கிட்டத்தட்ட அதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. குழந்தைகளுக்கும் இது போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் கொடுக்கிறோம். இதன் காரணமாக, வயதான காலத்தில் மக்கள் சந்தித்த பல பிரச்சனைகள் தற்போது குழந்தைப் பருவத்திலேயே அவர்களை வந்து தாக்குகின்றது. அதாவது கண் பலவீனம் அடைதல், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் முடி நரைத்தல் போன்றவையாகும்.
உண்மையில், முன்கூட்டியே முடி நரைப்பதற்கு காரணம் முடியில் மெலனின் இல்லாததுதான். வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்குவது சாத்தியமில்லை என்று நம்பப்பட்டாலும், ஊட்டச்சத்து குறைபாட்டை ஈடு செய்வதன் மூலம் இந்த பிரச்சனை அதிகரிப்பதை சுலபமாக தடுக்கலாம். எனவே இந்த பதிவில், குழந்தைகளின் தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: தினமும் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா? எப்போது முட்டை கொடுத்தால் நல்லது?
- குழந்தைகளுக்கு வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் முடி கண்டிப்பாக நரைக்கும். எனவே இந்த இரண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
- குழந்தைகளுக்கு வெள்ளை முடி இருந்தால் இரும்புச்சத்து, வைட்டமின் பி, சோடியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருந்த உணவுகளை அவர்களது உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
- ஆக்சிஜன் ஏற்றிகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களுக்கு கொடுங்கள். ஆக்சிஜனேற்றிகள் முடி நரைப்பதற்கு வழி வகுக்கும் எனவே குழந்தைகளின் உணவில் கண்டிப்பாக ஆக்ஸிஜனேற்றிகளைச் சேர்ப்பது மிகவும் அவசியம்.
- குழந்தைகளுக்கு நரைமுடி பிரச்சினை இருந்தால் அவர்களது உணவில் பட்டாணி, பீன்ஸ், நட்ஸ்கள், விதைகள் மற்றும் முட்டைகள் சேர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றில் ஃபோலிக் அமிலம் உள்ளன.
- குழந்தைகளுக்கு நரை முடி பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுங்கள். ஏனெனில், நெல்லிக்காயில் இருக்கும் கால்சியம் முடியை பலப்படுத்துகிறது மற்றும் முடியின் நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
- அதுமட்டுமின்றி அயோடின் நிறைந்த உணவுகளையும் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக கேரட் மற்றும் வாழைப்பழத்தில் அதிக அளவு அயோடின் காணப்படுகின்றது.
- குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட மற்றும் குப்பை உணவுகளை கொடுக்க கூடாது.
- மாசுபாட்டின் காரணமாக மூடி நரைக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.
- நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் கண்டிப்பாக முடி நரைக்கும். எனவே குழந்தைகளை அதிக நேரம் வெயிலில் இருக்க விட வேண்டாம்.
இதையும் படிங்க: குழந்தைங்க அமரும் 'பொசிஷன்' ரொம்ப முக்கியம்!! இப்படி உட்காந்தா கண்டிப்பா மாத்தனும்