Skin Care: முகத்தின் அழகை மருக்கள் வந்து கெடுகிறதா? இதோ இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பாருங்கள்..

Published : Sep 08, 2022, 08:01 AM IST

Skin Care Tips: முகத்தில் உள்ள தேவையில்லாத மருக்களை மிக எளிதாக நிரந்தரமாக அகற்ற வேண்டுமா..? இந்த எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் பின்பற்றி பாருங்கள்.

PREV
15
Skin Care: முகத்தின் அழகை மருக்கள் வந்து கெடுகிறதா? இதோ இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பாருங்கள்..

ஒரு சிலரின் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், முக்கியத்தில் மருக்கள் வந்து முகத்தின் அழகை கெடுத்து விடும். சில சமயம் அந்த இடத்தில் எரிச்சல்,  கருப்பு விழுந்து விடும். இப்படி இருப்பதை நம்மில் பலர் விரும்புவதில்லை. நாம் இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இவை நமது முகத்தின் அடையாளமாகவே மாறத் தொடங்குகின்றன. எனவே, சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நமது முகத்தில் உள்ள தேவையில்லாத மருக்களை மிக எளிதாக நிரந்தரமாக அகற்றலாம். இவை நிச்சயம் பலன் அளிக்கக்கூடிய வீட்டு வைத்தியங்கள் என்பதை நினைவில் கொண்டு பயன்படுத்தி பாருங்கள்..நிச்சயம் பலன் உண்டு.

 மேலும் படிக்க...மனைவி கையால், இந்த ஒரு பொருளை கணவருக்கு சாப்பிட கொடுத்தால் போதும்..கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்

25

வெங்காய விழுது

ஒரு வெங்காயத்தை எடுத்து நன்றாக பேஸ்ட் செய்து மருக்கள் உள்ள இடத்தில் தடவவும். 1 மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து ஒரு வாரம் தொடர்ந்து செய்யவும். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவை என்றால், வெங்காய விழுதில் வினிகர் அல்லது உப்பு சேர்க்கலாம்.

 மேலும் படிக்க...மனைவி கையால், இந்த ஒரு பொருளை கணவருக்கு சாப்பிட கொடுத்தால் போதும்..கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்

35

ஆமணக்கு எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா

ஆமணக்கு எண்ணெய் இதற்கு சிறந்த தீர்வாகும். முதலில், ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் ஒரு ஸ்பூன் சோடாவை கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதனை இரவில், மருக்கள் உள்ள இடத்தில் தடவி,  காலையில் சுத்தம் செய்யுங்கள். இப்படிஒரு வாரம் செய்து வந்தால் மருக்கள் மறையும். 

45

அன்னாசி பழச்சாறு

அன்னாசி பழச்சாற்றை பஞ்சு கொண்டு மருக்கள் இருக்கும், இடத்தில் மீது தடவி அதன் மீது ஒரு துணி கொண்டு இரவு வேளையில் கட்டி வைக்கவும்பிறகு காலையில் எழுந்து, அதை அகற்றி முகத்தை தண்ணீரில் கழுவவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால், ஒரே வாரத்தில் மருக்கள் தானே மறைந்துவிடும்.

55

வாழைப்பழத் தோல்

மருக்களை நீக்க வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலைத் தடவி ஒரு துணியால் கட்டவும். சிறிது நேரம் கழித்து வாழைப்பழத் தோலை அகற்றவும். இதை தொடர்ந்து செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து மருக்கள் உதிர்ந்து காணப்படும்.


 மேலும் படிக்க...மனைவி கையால், இந்த ஒரு பொருளை கணவருக்கு சாப்பிட கொடுத்தால் போதும்..கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்

Read more Photos on
click me!

Recommended Stories