Pudalangai benefits: புடலங்காயில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..? அடடே! இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே..?

Published : Sep 08, 2022, 07:03 AM IST

Pudalangai Maruthuvam in Tamil: மருத்துவ குணம் நிறைந்த புடலங்காய் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

PREV
17
Pudalangai benefits: புடலங்காயில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..? அடடே! இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே..?
Pudalangai Maruthuvam in Tamil:

நமது உடலுக்கு நன்மை தரும் பலவகையான காய்கள் நமது நாட்டில் விளைகின்றன. அதில், ஒன்றாக  புடலங்காய் பரவலாக பயிரிடப்படுகிறது. இதன் காய், வேர், இலை என் அனைத்தும் மருத்துவ குணமுடையவை என்றாலும், நாம் இதன் காயை மட்டும்தான் பயன்படுத்திகிறோம். இருப்பினும், நம்மில் பலர் புடலங்காயை ஒரு மூலிகை என்பதை அறியாமலே பல விதங்களில் பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, புடலங்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளதால், சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும்.

27
Pudalangai Maruthuvam in Tamil:

புடலங்காய் நன்மைகள்:

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.


மேலும் படிக்க...High Cholesterol: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்..இனிமேல், அலட்சியம் வேண்டாம்

37
Pudalangai Maruthuvam in Tamil:

 

புடலங்காய்  பயன்கள்:
 
1. புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.

2. தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

47
Pudalangai Maruthuvam in Tamil:

3. புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

4.அதிக உடல் சூட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.

 மேலும் படிக்க..Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

57
Pudalangai Maruthuvam in Tamil:

5. எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். ஏனெனில், உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது.

 6. இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

67
Pudalangai Maruthuvam in Tamil:

7. புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

8. புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்து வர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

 மேலும் படிக்க..Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

77
Pudalangai Maruthuvam in Tamil:

9. வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட நபர்கள் புடலங்காய் சேர்க்கப்பட்ட உணவினை தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுபோக்கு குணமாகும்.

10. புடலங்காய் குளிர்ச்சி தன்மை நிறைந்த ஒரு காய் வகையாகும். தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories