Biryani History: பிரியாணியின் ருசியான வரலாறு...அனைவரின் ஃபேவரைட் டிஷ்ஷாக மாறியது எப்படி..?

First Published Jul 18, 2022, 11:02 AM IST

Biryani History: சுவையும், மணமும் கொண்டு நாம் ருசித்து சாப்பிடும் பிரியாணி முதலில் எங்கிருந்து தோன்றியது தெரியுமா..? அவற்றின் வரலாற்று சிறப்புகள் பசுவையும், மணமும் கொண்டு நாம் ருசித்து சாப்பிடும் பிரியாணி முதலில் எங்கிருந்து தோன்றியது தெரியுமா..? அவற்றின் வரலாற்று சிறப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

Image: Getty Images

ஆரம்ப காலத்தில், பிரியாணி என்பது இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு செய்து உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வார்கள். அதிகமாக இஸ்லாமிய சகோதர்கள் வீடுகளில் அதிகாமாக பிரியாணி செய்யும் வழக்கம் இருக்கும். 

மேலும் படிக்க....Pyramids: மர்மங்கள் நிறைத்த பிரமிடுகள் பற்றி தெரியுமா..? அவற்றின் வரலாற்று பின்னணி என்ன? ஓர் சிறப்பு தொகுப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், முக்குக்கு முக்கு பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. மொத்தத்தில் பிரியாணி இன்றைய இந்தியாவின் தேசிய உணவாக மாறிவிட்டது.

பிரியாணி சுவைகளில் பல வகைகள் உண்டு. தேங்காய் பால் பிரியாணி, இது கேரளாவில் அதிக அளவு செய்யப்படுகிறது. காஷ்மீர் ஸ்டைல் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா சிக்கன் பிரியாணி, மலபார் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, வேலூர் பிரியாணி இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பிரியாணி பிடிக்கும்.  இத்தகைய சுவையும், மணமும் கொண்ட பிரியாணி முதலில் எங்கிருந்து தோன்றியது தெரியுமா..? அவற்றின் வரலாற்று சிறப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

பிரியாணி வகைகள்..?

இத்தகைய சுவையும், மணமும் கொண்ட பிரியாணி பிறந்த இடம் பாரசீகம் ஆகும். பாலைவனங்கள் நிறைந்த பாரசீகத்தின் இன்றைய பெயர் ஈரான். பாரசீகர்களின் பாரம்பரிய தொழிலான குங்குமப்பூவை, அண்டை நாடுகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்காக பாலைவனங்களை கடந்து பல நாட்கள் பயணப்படும் பாரசீகர்கள் கண்டுபிடித்ததுதான் பிரியாணி ஆகும். பாரசீகத்தில் இருந்து மத்திய ஆசியா, அங்கிருந்து இந்தியா என பிரியாணியின் பயணம் நீண்டது. அரேபிய வியாபாரிகள் மூலமாக கேரளாவிற்கு, பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு பிரியாணி வந்தது.

biryani

பிரியாணி வரலாறு..?

தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை விதவிதமான பிராணி வகைகள், நல்ல பொறப்பு தான் ருசித்து சாப்பிட கிடைத்துள்ளது. ஆரம்பத்தில், பாரசீகத்தில் காட்டில் வேட்டையாடும் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டதுதான் பிரியாணியாக உருவானது. முதலில் வெறும் மசாலாக்களை மட்டுமே பயன்படுத்திய பாரசீகர்கள், நாளடைவில் நறுமணத்திற்காக பல வாசனைப் பொருட்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இறைச்சியை ஒன்றாக சமைத்து சாப்பிடுவதே பிரியாணி என்ற நிலை மாறி, காய்கறி, முட்டை, இறால் என் பல பொருட்களை வைத்து பிரியாணி செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க....Pyramids: மர்மங்கள் நிறைத்த பிரமிடுகள் பற்றி தெரியுமா..? அவற்றின் வரலாற்று பின்னணி என்ன? ஓர் சிறப்பு தொகுப்பு

click me!