இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று ஆராச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவையாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், இவைகள் மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா இவ்வளவு பெரிய கட்டிடங்கள் கட்டியிருப்பார்கள்? என்ற கேள்விகள் மென்மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றன.
மேலும் படிக்க....August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்த மூன்று ராசிகளுக்கு... வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..