Snorer Tips: குறட்டை தொல்லையா..? குறட்டைக்கு குட் பை சொல்ல இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...

Published : Jul 18, 2022, 06:42 AM IST

Snorer Tips: பல்வேறு ஆபத்துகளை உண்டு பண்ணும், குறட்டை பிரச்சனையை சரி செய்வதற்கு சில எளிய வழிகளை கவனமாக பின்பற்றினால் போதும். 

PREV
14
Snorer Tips: குறட்டை தொல்லையா..? குறட்டைக்கு குட் பை சொல்ல இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...
snorer tips

ஒருவர் விடும் குறட்டை, அருகில் உள்ளவர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடுகிறது. நம்மில் பெரும்பாலானோர் அதனை அலட்சியமாக கருதுகின்றோம். பலர் குறட்டை விட்டு தூங்கினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக தவறாக நினைக்கின்றனர். ஆனால், குறட்டை பல்வேறு ஆபத்துகளை உண்டு பண்ணும். இரவில் உறக்கத்தில் குறட்டை விடுபவர்கள், பகலில் அதிக சோர்வு, அன்றாட வேலைகளில் அக்கறை செலுத்த முடியாமல், மன உளைச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய குறட்டை, இதயத்திற்கு பாதிப்பை தந்து இதய நோய்களைக் கொடுத்துவிடும். எனவே, குறட்டையை எப்படியாவது போக்கிவிட வேண்டுமென்று பலரும் பல சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சில எளிய வழிகளை பின்பற்றினாலே குறட்டையை விரட்டி விடலாம்.

 மேலும் படிக்க .....Controls diabetes: சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் மசாலா...கண்டிப்பா ஒருமுறை ட்ரை பண்ணுங்கோ...

24
snorer tips

மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும், இது குறட்டையை தவிர்க்கும். அதேபோன்று, இரவில் தூங்கச் செல்லும் முன் பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். 

 மேலும் படிக்க .....Controls diabetes: சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் மசாலா...கண்டிப்பா ஒருமுறை ட்ரை பண்ணுங்கோ...

34
snorer tips

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம். அப்படி செய்தால், குறட்டை தொல்லை ஓயும். மஞ்சள் தூள் கலப்படமின்றி சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நல்லது.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னதாக 1/2 பூண்டு பற்களை சாப்பிட்டு, அதன் பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

44
snorer tips

புகைபிடிக்கும்போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குகிறது.இதனால், தொண்டை வறண்டு போகலாம், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இதெல்லாம் குறட்டையினால் வரக்கூடிய பிரச்சனைகள். ஆரம்ப நிலையிலேயே இது போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்க வேண்டும். 

 மேலும் படிக்க .....Controls diabetes: சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் மசாலா...கண்டிப்பா ஒருமுறை ட்ரை பண்ணுங்கோ...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories