Controls diabetes: சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் மசாலா...கண்டிப்பா ஒருமுறை ட்ரை பண்ணுங்கோ...

Published : Jul 17, 2022, 04:09 PM IST

Controls diabetes: உங்களுடைய சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைப்பதற்கு உங்கள் சமையல் அறையில் இருக்கும் ஒரு பொருள் உதவுகிறதாம். 

PREV
16
Controls diabetes: சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் மசாலா...கண்டிப்பா ஒருமுறை ட்ரை பண்ணுங்கோ...
Coriander seed:

சர்க்கரை நோய் என்பது, ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவருக்கு இருக்கும் பொதுவான நோயாக தற்போது மாற துவங்கியுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைத்திருப்பது, நம் உடல் நலம் மட்டுமின்றி, எதிர் வரும் தலைமுறையினருக்கும் நல்லது. 

 

26
Coriander seed:

சர்க்கரை நோய் என்பது உங்க இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும் நோயாகும். இரத்த குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். சர்க்கரை  நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. இதற்குக் முக்கிய காரணமாக, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், மரபணு காரணமாகவும் இருக்கலாம்.

 

36
Coriander seed:

இந்நிலையில், நாம் சர்க்கரை நோயினை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை எனினும், அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். ஏனெனில், பிற இணை நோய்களுக்கு மூலதனமாக இந்த சர்க்கரை வியாதி உள்ளது. இதனை கட்டுக்குள் வைப்பதற்கு உங்கள் சமையல் அறையில் இருக்கும் ஒரு பொருள் உதவுகிறதாம். 

மேலும் படிக்க....Roasted Garlic: வறுத்த பூண்டில் இவ்வளவு பயனா...? ஆண்களுக்கு அந்த விஷயத்திற்கு சூப்பர் உணவாகும்...


 

46
Coriander seed:

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மசாலா:
 
நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க முழு கொத்தமல்லி உதவுகிறது. ஆம், நீரிழிவு நோயாளிகள் முழு கொத்தமல்லி விதைகளை உட்கொண்டால், உடல் ரீதியான சில பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

56
Coriander seed:

முழு கொத்தமல்லி  எப்படி உட்கொள்வது..?

முதலில் நீரழிவு நோயாளிகள், ஒரு கைப்பிடி முழு கொத்தமல்லி விதைகளை ஒரு சிறிய பாத்திரத்தில் இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடியுங்கள். இதைச் செய்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. 

மேலும் படிக்க....Roasted Garlic: வறுத்த பூண்டில் இவ்வளவு பயனா...? ஆண்களுக்கு அந்த விஷயத்திற்கு சூப்பர் உணவாகும்...

அதேபோல்,நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் சியா விதைகளை எடுத்து கொள்ளலாம். சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் சாப்பிடலாம். அவற்றில் உள்ள நார்ச்சத்துகள் நீரிழிவு நோயை நிர்வகிக்க துணை புரியும்.
 

66

முழு கொத்தமல்லியின் நன்மைகள்:

முழு கொத்தமல்லி விதைகளில் இருக்கும், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்க....Roasted Garlic: வறுத்த பூண்டில் இவ்வளவு பயனா...? ஆண்களுக்கு அந்த விஷயத்திற்கு சூப்பர் உணவாகும்...

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொத்தமல்லி விதை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

இந்த மசாலாவை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories