பெண் குழந்தைகள் விரைவில் பருவமடைய இதுவும் காரணமாம்.. சின்ன வயசுல இப்படியும் நடக்குமா?

First Published | Sep 6, 2024, 6:00 PM IST

Reasons of early puberty : பெண் குழந்தைகள் சிறு வயதில் பருவமடைவதால் உடலில் முன்கூட்டியே சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்கள் வேகமாக வளர்வது போல தோன்றினாலும், முழு மரபணு உயர்திறனை அடையாமல் தான் இருக்கிறார்கள். இதன் பின்னணியை இங்கு காணலாம்.  

முந்தைய காலங்களில் பெண் குழந்தைகள் பருவமடைவது திருவிழா போல கொண்டாடப்படும். ஆனால் இன்றைய காலத்தில் பெண் குழந்தைகள் விரைவில் வயதுக்கு வருவதால் சில பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர். இப்படி குழந்தைகள் சீக்கிரமே பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்துவது நல்ல மாற்றம் அல்ல. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் முன்கூட்டியே பருவமடைதல் அறிகுறிகளை கவனித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.  ஏனென்றால் இது எதிர்காலத்தில் அவர்களுடைய வளர்ச்சியை தடுக்க கூட வாய்ப்புள்ளது. 

முன்கூட்டி  பருவமடைவது குழந்தைகளுடைய மனநலனை கூட பாதிக்கலாம். ஏனென்றால் உடனடியான மாற்றங்கள் குழந்தைங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும். ஒரு பெண் அல்லது ஆண் குழந்தை முன்கூட்டி பருவமடைவதை எப்படி கண்டறியலாம்? பெண் குழந்தைகளை பொறுத்தவரை 8 வயதுக்கு முன்பும், ஆண் குழந்தைகள் 9 வயதுக்கு முன்பும் பருவமடைந்தால் அது முன்கூட்டிய பருவமடைதல் எனப்படுகிறது. 

இளம் வயதில் பருவமடையும் குழந்தைகள் விரைவாக வளர்வது போல தெரிந்தாலும், பின்னாட்களில் அவர்களுடைய முழு மரபணுவின் உயர்திறனை அடையாமல் தங்களுடைய வளர்ச்சியை நிறுத்தி விடுவார்கள். ஒரு பெண் குழந்தை பருவமடையும் போது அவளுடைய மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றது. பிறப்புறுப்பு, அக்குள் ஆகிய இடங்களில் முடிகள் வளர்கின்றன.  

மாதவிடாய், அண்ட விடுப்பு போன்ற இனப்பெருக்க செயல்பாடுகளும் தொடங்குகின்றன. ஆண்களுக்கு கொஞ்சம் வேறுபட்ட மாற்றங்கள் நிகழும். ஆண்கள் பருவமடையும்போது அவர்களுடைய ஆண்குறி விரிவடைகிறது. அந்தரங்க உறுப்பு, அக்குள் ஆகியவற்றில் முடிகள் வளர்கின்றன. சில ஆண்களுக்கு முகப்பருக்கள் வருகின்றன. மென்மையான குரல் கடினமான குரலாக மாற்றம் அடைகிறது. மீசை, தாடி போன்றவை வளரத் தொடங்கும். 

Tap to resize

சராசரியாக ஒரு பெண் குழந்தை இயற்கையாகவே பருவமடைகிறாள் என்றால் அவளின் வயது 8இல் இருந்து  13 வயது வரை இருக்கலாம். அதுவே ஆண் குழந்தை எனில் 9 முதல் 14 வயது வரை இருக்கலாம். இப்படி வயதில் பருவம் எய்தாமல் முன்கூட்டியே சில குழந்தைகள் பருவமடைய என்ன காரணம் என இங்கு காணலாம். 

உடல் பருமன்: 

குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பது உடலில் உள்ள கொழுப்பு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு, இன்சுலின் அளவை உயர்த்துகிறது. இதனால் பருவமடையும் நேரம் குறைந்து விரைவில் பூப்பெய்திவிடுகிறார்கள்.  குழந்தைகள் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற உடல்ரீதியான செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் இதற்கு காரணம். சிறு வயதில் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபட வலியுறுத்த வேண்டும். 

பிபிஏ நுகர்வு: 

குழந்தைகள் அன்றாட வாழ்வில் பிபிஏ நுகர்வு (BPA) குறைப்பதும் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாக அமையும். தினமும் பிபிஏ பிளாஸ்டிக் டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள் என உணவு சேமிப்பு முதல் தண்ணீர் வரை பிளாஸ்டிக் நுகர்வு உள்ளது. இந்த பிபிஏ எனும் வேதிப்பொருள் குழந்தைகள் உணவு மூலமாக உடலுக்குள் செல்கிறது. முன்கூட்டியே பெண்கள் பருவமடைய BPA நுகர்வு முக்கிய காரணம்.

பிளாஸ்டிக் அல்லாத எஃகு, கண்ணாடி அல்லது பிபிஏ இல்லாத சேமிப்பு கலன்களை குழந்தைகளை பழக்குங்கள். வண்ணமயமாக இருக்கும் பிளாஸ்டிக் பாக்ஸுகளை தவிருங்கள். இது மட்டுமின்றி வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள், கருவுறுதல் சிக்கல், பிசிஓஎஸ் (PCOS),பிசிஓடி (PCOD) ஆகிய பிரச்சனையுடனும் பிபிஏ சம்பந்தப்பட்டுள்ளது.  

ஊட்டச்சத்து பானங்கள்:

குழந்தைகள் புரோட்டீன் ஷேக் அருந்துவது கூட அவர்களின் பதின்ம வயதில் பக்க விளைவுகளை ஏற்படுத்த காரணமாக உள்ளது. குழந்தைகள் இருந்து புரோட்டீன் ஷேக் போன்ற ஊட்டச்சத்து பானங்களில் ஹார்மோன்களை தூண்டும் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன. இதனால் ஏற்படும் மாற்றங்களால் சில ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படுகிறது. பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது. சில ஆய்வுகள் புரோட்டின் ஷேக், சில பதப்படுத்தப்பட்ட பானங்களில் ஹார்மோன்களைப் பாதிக்கும் காரணிகள் உள்ளதாகக் கூறுகின்றன.  

இதையும் படிங்க:  பெற்றோர்களே.. தினமும் காலை இந்த 5 விஷயங்களை செய்ங்க.. உங்க குழந்தை புத்திசாலியாகும்!

துரித உணவுகள்: 

உடல் பருமன், போதிய உடல் செயல்பாடுகள் இல்லாத குழந்தைகள் துரித உணவை உண்பது ஆபத்தானது. துரித உணவு உடல் பருமனை அதிகரிக்கும். துரித உணவில் விலங்கு இறைச்சி சேர்க்கப்படுகிறது. அதிக அளவில் விலங்குகளின் கொழுப்பை உண்பது உடலில் இன்சுலின் அளவை அதிகப்படுத்தும். இதனால் விரைவில் குழந்தைகள் பருவம் அடைகிறார்கள்.

ஒரு குழந்தை 3 வயது முதல் 7 வயது வரையிலும் விலங்கு கொழுப்பை அதிகமாக சுவைத்தால் அவர்கள் விரைவில் பருவமடையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏழு வயது வரை ஒரு குழந்தை மிதமான அளவில் வீட்டில் சமைத்த அசைவ உணவையும் (பொறிக்காதது), சைவ உணவையும் எடுத்துக் கொள்வதால் பருவமடைதல் தாமதப்படுத்தப்படுகிறது.  இதனால் இயற்கையான முறையில் குழந்தைகள் பருவமடைவார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சியை தவிர்க்கலாம். 

பிட்யூட்டரி தாக்கம்: 

குழந்தைகள் விரைவில் பருவமடைவதற்கு சமூகமும் ஒரு காரணமாக உள்ளது. சமூகமும், ஊடகமும் குழந்தையுடைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். வயது வந்தோரின் செயல்பாடுகளை வெளிப்படையாக காட்டுவது குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் தலைமை சுரப்பி என அழைக்கப்படும் பிட்யூட்டரி சுரப்பியில் தாக்கம் உண்டாக்கும்.

இது ஹார்மோன்களுக்கு கட்டளையிடும் சுரப்பி. இது தூண்டப்பட்டால் பாலியல் ஹார்மோன்கள் உற்பத்தி செய்ய சிக்னல் கொடுக்கும். ஆகவே ஆண்களின் பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனும், பெண் பால் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும் உற்பத்தி செய்யப்படும். இதுவே முன்கூட்டிய பருவமடைதலுக்கு ஒரு காரணமாக மாறுகிறது.

இதையும் படிங்க:  பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் விலகி ஓட இந்த 5 விஷயங்கள் தான் காரணம்!! 

பசும் பால்: 

பெண்கள் விரைவில் பூப்பெய்தவும், அவர்களின் முன்கூட்டிய மார்பக வளர்ச்சிக்கும் பசும் பால் அதிகம் குடிப்பது காரணமாக சொல்லப்ப்டுகிறது. இதுவே மாதவிடாயை தூண்டுகிறதாம். ஆண் குழந்தைகளிடையே முடி வளர்ச்சிக்கும் இது காரணம். ஆகவே குழந்தைகளுக்கு பசும் பாலை அதிகமாக கொடுக்கவேண்டாம் என்கிறார்கள். 

குழந்தைகள் பசும்பால் அருந்துவதால் கூட முன்கூட்டியே பருவமடைதல் ஏற்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?ஆனால் பசுக்கள் பால் உற்பத்தி செய்ய அவற்றில் நிகழும் போவின் சோமாடோட்ரோபின் (RSBT) என்ற புரத செயற்கை பாதிப்பு கூட காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவரை நிரூபனமான சான்றுகள் இல்லை. ஆனாலும் கவனமாக இருப்பது நமது கடமை. 

மேலே சொல்லப்பட்ட காரணங்களை இதுவரை நீங்கள் பின்பற்றாவிட்டாலும், இனிமேல் அதனை கவனமாக பின்பற்றி ஆரோக்கியமான வழிகளில் குழந்தைகளை  வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

Latest Videos

click me!