3. இறைச்சியிலும் சர்க்கரையா
பல நிறுவனங்கள் சுவையை அதிகரிக்க மாரினேஷனில் சர்க்கரை, டெக்ஸ்ட்ரோஸ், கார்ன் சிரப் போன்றவற்றைச் சேர்க்கின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இன்கிரிடியன்ட்ஸ் பட்டியலில் முதல் 3 இடங்களில் சர்க்கரை / டெக்ஸ்ட்ரோஸ் இருந்தால், அதை வாங்க வேண்டாம்.
4. பிரிசர்வேட்டிவ்ஸ், இன்கிரிடியன்ட்ஸ் பட்டியல்
சோடியம் நைட்ரைட் (E250), சோடியம் நைட்ரேட் (E251), MSG (E621) போன்றவை இறைச்சியை சிவப்பாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் காட்டப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட அல்லது மாரினேட் செய்யப்பட்ட ஃப்ரோஸன் இறைச்சியில் அதிக உப்பு, சர்க்கரை அல்லது பிரிசர்வேட்டிவ்ஸ் இருக்கலாம். 'No Added Preservative' மற்றும் 'Ingredients: Chicken / Fish 100%' என்று எழுதப்பட்டிருப்பதை வாங்குவது சிறந்தது.
5. சேமிப்பு வழிமுறைகள்
பாக்கெட்டில் -18°C or below' என்று எழுதப்பட்டிருக்கும். கடையின் ஃபிரீசர் -18°C-ல் இல்லை என்றாலோ அல்லது பேக்கெட்டின் உள்ளே ஐஸ் கட்டிகள் உறைந்திருந்தாலோ, 'கோல்டு செயின்' உடைந்திருக்கிறது என்று அர்த்தம். அந்த பேக்கெட்டை வாங்காதீர்கள். IQF என்று எழுதப்பட்ட மீன்-இறைச்சி வகைகள் சிறந்தவை.