Tight Jeans : பெண்களே!! நாள் முழுக்க ஜீன்ஸா? மோசமான விளைவு வரும் தெரியுமா?

Published : Jul 11, 2025, 11:54 AM IST

பெண்களே இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது பார்ப்பதற்கு ஸ்டைலாக தோன்றினாலும், நீண்ட நேரம் அதை அணிந்தால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
17
பெண்கள் நீண்ட நேரம் ஏன் ஜீன்ஸ் அணியக்கூடாது?

ஜீன்ஸ் இன்றைய நவீன உலகில் மிகவும் பிரபலமான ஃபேஷன் டிரஸ்ஸில் ஒன்றாகிவிட்டது. ஆண், பெண், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இது வசதியாக இருப்பதால் அணிய விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த காலத்து கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் அனைவருமே அதிகமாகவே ஜீன்ஸ் ஆடைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இருந்தாலும் அதை நீண்ட நேரம் அணிந்தால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? சரி இப்போது நாள் முழுவதும் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் பெண்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

27
இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் :

நாள் முழுவதும் பெண்கள் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் விளைவாக அந்த பகுதியில் வீக்கம் மற்றும் மரத்துப் போகுதல் பிரச்சனையை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வேரிக்கோஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

37
சருமம் பாதிக்கப்படும் :

நீண்ட நேரம் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் தோல் மூச்சு விடும் தன்மை குறைந்து, வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் ஒன்று சேர்ந்து சருமத்தில் அரிப்பு, பூஞ்சைகள், சொறி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

47
முதுகு வலி :

நீண்ட நேரம் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் இடுப்பு மற்றும் முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, நரம்புகளில் வலியை உருவாக்கும். இது தொடர்ந்து நீடித்தால் நிரந்தரமான முதுகு வலிக்கு வழிவகுக்கும்.

57
சிறுநீர் தொற்று :

நீங்கள் நீண்ட நேரம் இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்தால் வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிக்குழாயில் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். இதனால் UTI சிறுநீர் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன.

67
செரிமான பிரச்சினை :

நீண்ட நேரம் இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்தால் வயிறு மற்றும் குடல் பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். இதன் விளைவாக அடிக்கடி வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

77
பிறப்புறுப்பில் எரிச்சல் :

நீண்ட நேரம் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் இருக்காது. இதன் காரணமாக அங்கு பாக்டீரியாக்கள் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. இதனால் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories