தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் "Nutrients 2022" இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, முப்பது நிமிடங்கள் நடப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதாகவும், தூக்கத்தின் போது கூட கலோரி எரிப்பை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
படுக்கைக்குச் செல்வதற்கு முன், நடைபயிற்சி மேற்கொள்வது எடை இழப்பு அல்லது எடை பராமரிப்புக்கு உதவும். கடுமையான உடற்பயிற்சி செயல்பாடு நடைப்பயணத்தை விட அதிக கலோரிகளை எரிக்கக்கூடும். இதனால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்தெரியுமா?