தூதுவளை இலையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையலாக செய்து சாப்பிடலாம். குறிப்பாக, காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.