நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுவும் குறிப்பாக பருவகால பழங்களை சாப்பிடுவது நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவும். அந்த வகையில், முள் சீத்தாப்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவு தெரிந்து கொள்ள.
25
Ramphal fruit for immunity
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
பருவநிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் அனைவரும் பாதிக்கப்படுவோம். அந்த வகையில் முள் சீத்தாப்பலத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது தவிர, இந்த பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி உள்ளது இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் எந்த பழம் சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அந்த வகையில், முள் சீத்தாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இந்த பழத்தில் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கும் பண்புகள் காணப்படுகின்றன. மேலும் இதில் இருக்கும் தாதுக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே சிறந்தது. இது தவிர இந்த பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.
மூட்டு வலி மற்றும் பலவீனமான எலும்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த முள் சீத்தாப்பழம் மிகவும் நன்மை பயக்கும். இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி இருக்காது மற்றும் எலும்புகள் வலிமையாகும்.
55
Ramphal fruit for skin and hair
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
முள் சீத்தாப்பழத்தில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் உடலில் ஃப்ரீபிரீரேடிக்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடும். இது தவிர இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சரும மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.