இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை எல்லாருக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு நாமே தான் காரணம். தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், உடலில் கொலஸ்ட்ரால் விரைவாக உயரும். இந்த கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வழிகளில் வெங்காய டீயும் ஒன்று. அதன் பயன்கள் என்னென்ன? செய்முறை குறித்து இங்கு காணலாம்.
வெங்காய டீ குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். வெங்காய டீயில் உள்ள பிளாவனாய்டுகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. வெங்காயம் நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துக்கள் சேர்வதைத் தடுக்கிறது.
வெங்காய டீ குடிப்பதால் உடல் சூடாகும். இது இரத்த நாளங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகிறது. உங்களின் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் தானாகவே குறையும். வெங்காய டீ ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து இரத்த நாளங்களின் சுவர்களைப் பாதுகாக்க உதவுகிறது. இப்படி தான் வெங்காய டீ அதிக கொழுப்பு, மோசமான இரத்த ஓட்டப் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
செய்முறை
வெங்காய டீ செய்வது ரொம்பவும் எளிது. முதலில் வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். அதனை 2 கப் தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீர் பாதி வரை வற்றும் வரை கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி, கொஞ்சம் தேன், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்க்கவும். உங்களுக்கு பிடித்தால் கொஞ்சம் உப்பும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த டீயை சூடாக அருந்தினால் நல்லது. அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் பாகற்காய்.. மிஸ் பண்ணாம சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள்!