போனிலேயே மூழ்கிக் கிடப்பதனால் குற்ற உணர்வுக்கு ஆளாகுகிறீர்களா..?? இதை படியுங்கள்..!!

First Published | Feb 2, 2023, 12:29 PM IST

போன் பயன்பாடு என்பது ஒவ்வொருடைய வாழ்வியலையும் மாற்றி வருகிறது. இந்த தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவருவது நம் கைகளில் தான் உள்ளது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.
 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏறத்தாழ அனைத்து வயதினரும் தினசரி செல்போன் திரையை உற்றுப் பார்த்தவாறே நேரத்தை கடத்துகின்றனர். எந்நேரமும் போன், எதற்கும் போன் என்கிற மனநிலை உருவாகிவிட்டது. இது ஆரோக்கியத்துக்கும், கண்களுக்கும் மோசமான விளைவு ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் கூட, போனை பார்ப்பதை பலரால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

இதனால் தூங்கும் நேரம் குறைந்துபோகிறது. அதிக நேரம் போனை பார்ப்பதால் தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை மற்றும் முதுகில் வேதனை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இளைய தலைமுறையினர் பலரும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 மணிநேரம் திரைகளுக்கு முன்னால் செலவிட வேண்டிய தொழிலில் ஈடுபடுகின்றனர். அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தெரிந்திருந்தும், கட்டுப்படுத்த முடியவில்லை மற்றும் விட்டு விலக முடியவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், திரைநேரத்தை குறைக்க முடியும். அதுகுறித்து தெரிந்துகொள்வோம்.
 


mobile

கண்காணிப்பு

நீங்கள் ஒவ்வொரு நாளும் மொபைல் போன்களை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை கண்காணிக்க துவங்குங்கள். இதற்கு உதவ பல கருவிகள் உள்ளன, குறிப்பாக செல்போன் செயலிகளில் கூட அது கிடைக்கின்றன. போன் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை நிறுவ இந்த விவரங்களையும் பதில்களையும் கருவிகளில் பதிவேற்றம் செய்து கவனித்து வரலாம். எடுத்துக்காட்டாக 2 மணிநேரம் பயன்பாட்டிற்குப் பிறகு, நீங்கள் அதை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்தால், குறிப்பிட்ட செயலிக்கு கட்டளையிட்டால், அது உங்கள் ஃபோனை அணைத்துவிடும். ஆரம்பத்தில் இது சற்று கடினமாக தெரிந்தாலும், போகப்போக எளிதாகிவிடும்.
 

படுக்கைக்கு வரக்கூடாது

படுக்கை அறை வரை போனை எடுத்துச் செல்வதால் தான், எந்நேரமும் போனும் கையுமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. அதனால் உறங்கச் செல்லும் போது, போனை படுக்கை அறைக்கு அல்லது படுக்கைக்கு எடுத்துச் செல்லாதீர்கள். உறங்கும் முன்னும் பின்னும் நீல ஒளி (திரைகளில் இருந்து வெளிவரும் ஒளி மற்றும் நம் கண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்) வெளிப்பாடு கண் ஆரோக்கியத்துக்கு கேடு செய்கிறது. உங்கள் அறைக்கு வெளியே உங்கள் மொபைலை வைக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும்.
 

அவ்வப்போது விட்டு விலகுங்கள்

எந்நேரமும் போனும் கையுமாகமாக தான் இருக்கிறோம். இதற்கு குழந்தைகளும் விதிவிலகல்ல. எனினும் குடும்பத்துடன் இருக்கும்போதோ அல்லது விடுமுறை நாட்களில் போன் பயன்பாட்டை கொஞ்சம் குறைக்க முயற்சிக்கலாம். ஒன்றாக அனைவரும் சாப்பிடும்போது, குடும்பத்துடன் வெளியே செல்லும் போது, அனைவரும் சேர்ந்து பயணம் மேற்கொள்வது போன்ற நேரங்களில் போனை விட்டு விலகியே இருங்கள். உங்களால் முடிந்தால் அணைத்துவிடுங்கள். இந்த பழக்கத்தை வார இறுதியில் காலை முதல் மதிய உணவு வரை மட்டும் முயற்சி செய்யுங்கள். உங்களால் இதை பின்பற்ற முடியும் போது, மொபைலை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும் நேரத்தை மெதுவாக அதிகரிக்கவும். இதனால் மொபைல் மீதான சார்புநிலை உங்களை விட்டு போகும். 

சாப்பிடும் போது வேண்டாம்

சமூகவலைதளங்கள், வீடியோக்கள், பாடல்களை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது நன்றாக இருக்கலாம். ஆனால், உங்கள் கண்களுக்கு இடைவேளை என்பது அவசியம். அது எப்போதும் எல்.இ.டி விளக்குகளுக்கு எக்ஸ்போஸ்யாகிவாறே இருக்கக்கூடாது. கண்களின் நலன், உள்ளே இருக்கும் நிரம்பு, பார்வைத் திறன் மற்றும் ரத்த ஓட்டம் போன்றவை பாதிக்கப்படும். இந்த இடைநிறுத்தங்களின் போது திரையை விலக்கி வைப்பதன் மூலம், உங்கள் கண்களுக்கு இடைவேளையை அனுமதிப்பீர்கள். மேலும் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களும் உடம்பில் ஒட்டும்.

காபியில் பால் சேர்ப்பது நல்லதா? அப்படி குடிக்கலாமா?

அடுத்த வேலையை பாருங்கள்

சலிப்பு ஏற்படுவதை தடுக்க, போன்வழியாக நம்மில் பலர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு போய்விடுகிறோம். அடுத்த முறை உங்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும்போதோ அல்லது சமூக ஊடகங்களில் கவனமில்லாமல் உலாவ நினைத்தாலோ, புத்தகத்தை எடுப்பது, ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவது அல்லது ஊர் சுற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபடுங்கள். தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுங்கள், வளர்ப்பு பிராணிகளோடு விளையாடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், உங்களுடைய நெருங்கிய நண்பருடன் தொலைபேசியில் உரையாடுங்கள். உங்களை எப்போதும் இயக்கத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடல்நலனையும் மனநலனையும் காக்கும்.

Latest Videos

click me!