Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்

Published : Jul 07, 2022, 12:15 PM IST

Solam Nutrition: இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான உணவுகளில் புரத சத்து அதிகம் உள்ள சோளத்திற்கு முக்கிய பங்குண்டு. இவற்றில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. 

PREV
16
Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய  நன்மைகள்
Jowar Nutrition:

இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான உணவுகளில் புரத சத்து அதிகம் உள்ள சோளத்திற்கு முக்கிய பங்குண்டு. இவற்றில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. 

வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம் உள்ளிட்ட ஏறக்குறைய 30 வகையான சோளம் இருக்கிறது. இது இந்தியாவின் வெவ்வேறு வறண்ட பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது.

26
Jowar Nutrition:

இவற்றில் அதிகமான புரதம், தாமிரம் மற்றும் இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது. இன்றைய பிஸியான வாழ்கை முறையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பாரம்பரிய உணவு முறைகளை நாம் தவிர்த்து விட்டோம். எனவே, இனி அன்றாட உணவில் சோளம் சேர்த்து கொள்வோம். அப்படி சேர்த்து கொள்வதால் என்னென்னெ பயன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

 மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

36
Jowar Nutrition:

வைட்டமின்கள்:

இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உடலுக்கு வேண்டிய புத்துணர்ச்சியை அளிக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் போன்றவை அதிகளவில் உள்ளது. சோளம் மாவாகவும், ரவை போன்ற வடிவிலும் கிடைப்பதால் சோள உப்புமா, சோள ரொட்டி, சோள கேக், சோள லட்டு விதவிதமான உணவு வகைகளும் செய்யலாம்.  தினமும் சோளத்தை உங்கள் உணவில் சேரத்து அதன் பலன்களை பெறுவது அவசியம்.

 

46
Jowar Nutrition:

நீரழிவு  பிரச்சனை:

தினசரி உணவில் அடிக்கடி சோளம் சேர்த்து கொள்வதால், நீரழிவு நோய்க்கு சிறப்பாக செயல்படுகிறது. நார்ச்சத்து மற்றும் புரதம் இரண்டும் இரத்தத்தில் சர்க்கரை  அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால், பல்வேறு நோய்கள் தடுக்கப்படுகிறது.

 மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

56
Jowar Nutrition:

நார்ச்சத்து:

நார்ச்சத்து சோளத்தில் அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது. எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இது கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுப்பதால் இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்பதால், இரத்தத்திற்கு கார்போஹைட்ரேட் செல்ல வழிவகுக்கிறது. 

 மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

66
Jowar Nutrition:

எலும்புகள் பலப்படும்
 
சோளத்தில்  மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்கின்றது. வெள்ளை சோளம் வயது முதிர்வால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலு பெறுவதுடன் தேய்மானம் சரி செய்யப்படுகின்றது.

Read more Photos on
click me!

Recommended Stories