World Chocolate Day: சாக்லெட்டில் இத்தனை ரகங்களா..? ஒவ்வொன்றும் ஒரு விதம்..சாக்லெட் பிரியரை குஷியாக்கும் பதிவு

First Published Jul 7, 2022, 10:45 AM IST

World Chocolate Day 2022: உலக சாக்லெட் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எல்லோருக்கும் பிடித்தமான சாக்லெட்டுகளில் பல வகைகள் உள்ளன.

Chocolate day

உலக சாக்லேட் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாக்லேட் தொடர்பாக சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

மில்க், வொய்ட், டார்க், கசக்கும் சாக்லெட், பேக்கிங் சாக்லெட், ரூபி சாக்லெட் என உள்ளன. இனிப்புகளிலேயே திகட்டாதது இந்த சாக்லெட் மட்டும் தான் என சொல்வார்கள். இப்படிப்பட்ட சாக்லெட்டை காதலர் அல்லது காதலியை தாண்டி இன்று உங்களின் அன்பானவர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க.....World Chocolate Day: உலக சாக்லேட் தினம்...ஸ்வீட் எடு..கொண்டாடு..! நல்ல பொறப்புதான் சுவைச்சு சாப்பிட கிடைச்சது?

Chocolate day

சாக்லேட்டில் கோகோவின் பங்களிப்பு:

சாக்லேட்டில் உள்ள அனைத்து முக்கிய ஆரோக்கிய நன்மைகளுக்கும் முக்கிய மூலப்பொருள் கோகோ ஆகும். கோகோவில் ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. கோகோ கசப்புதன்மை உடையது. ஆனால், அதே நேரம் சுவைக்காக அதில் சேர்க்கப்படும் பால் மற்றும் சர்க்கரை, இந்த ஆண்டிஆக்ஸிடெண்ட் தன்மையை குறைக்கிறது.  இதனால், நமக்கு சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

Chocolate day

இனிப்பு சாக்லேட்:

''கசப்பான" அல்லது "பேக்கிங்" சாக்லேட் என்றும் அழைக்கப்படுகிறது. சாக்லேட் போன்ற தோற்றம் மற்றும் வாசனைகளைக் கொண்டாலும், அது ஒரு கசப்பான சுவை கொண்டது. இது சர்க்கரை, கோகோ கலந்த கலவையாகும். இது ஒரு ரிச் லுக் சாக்லேட் சுவையை வழங்குகிறது. 

Chocolate day

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட் என்பது தூய கொக்கோ கொண்டு தயாரிக்கப்படுகிறது, இது சற்று கசப்பாக இருக்கும். இந்த வகையான சாக்லேட் இனிப்புகள் மற்றும் கேக்குகளை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற சாக்லேட்டுகளுடன் ஒப்பிடும்போது டார்க் சாக்லேட் ஆரோக்கியமான வகை சாக்லேட்டாக கருதப்படுகிறது.ஏனெனில் இதில், சர்க்கரை இல்லை மற்றும் அதிக அளவு கோகோ உள்ளது.
 

Chocolate day

மில்க் சாக்லேட்: 

இதுசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாக்லேட் வகையாகும். இதில் பால், கோகோ மற்றும் சர்க்கரை உள்ளது. கோகோ மற்றும் பாலின் சதவீதம் பிராந்தியத்திற்கு வேறுபடுகிறது. 

மேலும் படிக்க.....World Chocolate Day: உலக சாக்லேட் தினம்...ஸ்வீட் எடு..கொண்டாடு..! நல்ல பொறப்புதான் சுவைச்சு சாப்பிட கிடைச்சது?

Chocolate day

வெள்ளை சாக்லேட்:

இந்த வகையான சாக்லேட்டில் குறிப்பிடத்தக்க அளவு பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டு உள்ளது. இது கோகோ வெண்ணெய் மட்டுமே கொண்டுள்ளது, இது சாக்லேட் உள்ளே கீரிம் வெளியே அதன் வெள்ளை நிறத்தை அளிக்கிறது. இந்த, வெள்ளை சாக்லேட் தவிர எல்லா சாக்லேட் வகைகளிலும் அத்தியாவசிய சாக்லேட் உள்ளது.

மேலும் படிக்க.....World Chocolate Day: உலக சாக்லேட் தினம்...ஸ்வீட் எடு..கொண்டாடு..! நல்ல பொறப்புதான் சுவைச்சு சாப்பிட கிடைச்சது?

click me!