Tea : இப்படி 'இஞ்சி' டீ குடித்தால் கண்டிப்பா ஆயுள் அதிகரிக்கும்..! ஒட்டுமொத்த நன்மைகள் தெரிந்தால்..

Published : Oct 31, 2025, 03:43 PM IST

இஞ்சி டீ சுவைக்கு மட்டுமல்ல; அதன் ஆரோக்கிய நன்மைகளும் பிரபலமானது. இஞ்சி டீயை எப்படி குடித்தால் கூடுதல் நன்மைகளை பெறலாம் என இங்கு காணலாம்.

PREV
16

ஆயுர்வேதம் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க பல குறிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் இஞ்சிக்கு முக்கிய இடம் உண்டு. இஞ்சி இருமல், தொண்டை வலியை நீக்கும் மூலிகையாகும். குளிர்காலத்தில் சூடாக 1 கப் இஞ்சி டீ குடித்தால் இதமாக இருக்கும். உடலை புத்துணர்வாக்கும். சளியைத் தடுப்பதோடு இன்னும் பல நன்மைகளைத் தரும் இஞ்சி டீ குறித்து இங்கு காணலாம்.

26

இஞ்சி தினமும் சேர்த்தும் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமானம் மேம்பட்டு உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். எடையை குறைக்க சிறந்த பானமாகும். ஏற்கனவே அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாயு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

36

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் உதவும். இஞ்சி தேநீர் அருந்தினால் மன அழுத்தத்தைக் குறையும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இஞ்சியுடன் எலுமிச்சை சேர்த்து எடுத்துக் கொண்டால் பலன்கள் இரட்டிப்பாக்கும். இஞ்சி டீயை வழக்கமாக தயாரிப்பது போல பால், தேயிலை சேர்த்து குடித்தால் புத்துணர்வாக இருக்கும். ஆனால் அதுவே ஆயுர்வேதம் சொல்லும் முறையில் இஞ்சி, எலுமிச்சை தேநீர் குடித்தால் சளி, காய்ச்சல், தொண்டை வலி, செரிமான பிரச்சனை அனைத்தில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

46

இஞ்சி எலுமிச்சை தேநீரை தயாரிக்க ஒரு துண்டு இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன் (விருப்பினால்), தண்ணீர் ஆகியவை சேர்க்க வேண்டும். இஞ்சி, எலுமிச்சை ஆகிய இரண்டுமே ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளன. குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகிய தொற்றுநோய்களை குறைக்க உதவும். செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.

56

இஞ்சி, எலுமிச்சை தேநீர் அதிகமான கலோரிகளை எரிக்குமாம். இதனால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கரைகிறது. தேன் சேர்க்காமல் அருந்தினால் உங்களுடைய இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் செய்யும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதனை கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

66

எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எலுமிச்சை, இஞ்சி சேர்த்து தயாரிக்கும் தேநீர் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது. குளிர்கால நீரிழப்பை தடுக்க உதவுகிறது. இந்த தேநீர் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது. பல நோய்களுக்கு அடிநாதமே மன அழுத்தம் தான். அதை குறைக்க உதவுவதால் நாள்பட்ட நோய்களை கட்டுக்குள் வைக்க முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories