Health benefits of eating a flaxseeds: நம்மில் பலருக்கு ஆளி விதையை சாப்பிட்டால் நல்லது என்று மட்டும் தான் தெரியும். ஆனால், என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி தெரியாது..? அப்படி தெரிந்து கொள்ள விருப்பினால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆளி விதைகள் ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும். இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். மற்றுமொரு வழியாக, முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். எனவே, தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிட்டால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துவைத்து கொள்வோம்.
ஆளி விதையில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஆளி விதையில் இருக்கும், லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு, உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.
36
Health benefits of eating a flaxseeds:
கருப்பை செயலிழப்பு:
பெண்களுக்கு ஆளி விதை, ஆரோக்கியமான உணவு பொருளாகும். ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். அதேபோன்று, மாதவிடாய் நின்ற பெண்கள், தொடர்ச்சியாக ஆளி விதையை உட்கொண்டு வந்தால், சுழற்சி மாற்றங்களை தடுக்கும் மற்றும் கருப்பை செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள் .
46
Health benefits of eating a flaxseeds:
சிறுநீரக பிரச்சனை:
ஆளி விதையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டுவந்தால், சிறுநீரக ஆரோக்கியம் பராமரிக்கப்படும். அதுமட்டுமின்றி, சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். எனவே உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், ஆளி விதையை அன்றாடம் உணவில் ஒரு கையளவு சேர்த்துக்கொள்ளுங்கள்
56
Health benefits of eating a flaxseeds:
எடை குறைப்பு:
ஆளிவிதையில் புரதச்சத்து, நார்சத்து நிறைந்துள்ளது, இதைச் சரியான அளவில் உட்கொண்டால் அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமல்லாமல், எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவும். இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும். அத்துடன் சைவப் பிரியர்களின் உடலுக்கு புரதச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஆளிவிதை சிறப்பான உணவு பொருளாகும்.
ஆளி விதை எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு பலன் அளிக்கும். அதுமட்டுமின்றி, ஆளி விதை எண்ணெய் ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், ஆளி விதை முடி உதிர்வு மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து பொருளாகும். தொடர்ந்து ஆளி விதை உட்கொண்டு வந்தால், முடி உதிர்வது மட்டுமல்ல, முடி வளர்வதற்கும் உதவும்.