இந்த இரண்டு முக்கிய மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கினாலும், ஜூலை முதல் வாரம் வரை இதன் உடனடித் தாக்கம் எதிரொலிக்கும். இந்த இரண்டு ராசி மாற்றங்களுடன் செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் பல நன்மைகளை கொண்டு வரும். இவர்கள் தங்கள் பேச்சு சாதுர்யத்தால் பல பெரிய வெற்றிகளை அடைவார்கள். மேலும், இந்த நேரத்தில் இவர் சூரியனுடன் இணையும் போது புதாதித்ய யோகம் உண்டாகும். எந்தெந்த ராசிகளுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.