திராட்சையில் உள்ள வைட்டமின் சி நம் உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் ஆகிய தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உறுதியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. இதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைக்கும். திராட்சையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் தான் புற்றுநோய் உண்டாக்கும் செல்களுடைய பரவுதலை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.
திராட்சையில் குறைவான அளவில் உள்ள சோடியம், இரத்த அழுத்த பிரச்சனைகளை கூட குறைக்கும். திராட்சை உண்பதால் கிடைக்கும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்த ஆபத்தை குறைக்கிறது. திராட்சைகள் நார்ச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை நம் உடலில் உள்ள தேவையற்ற (LDL) கொழுப்புகளை குறைக்கும். இதனால் இரத்த ஓட்டமும் சீராகும்.
கருப்பு திராட்சைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் உடையவை. இரத்த சர்க்கரையை உயர விடாமல் பார்த்துக்கொள்ளும். நீரிழிவு நோய் வரும் காக்க இது நல்ல தேர்வு. இந்த பழங்களை உண்பதால் சர்க்கரை வியாதி வரும் அபாயத்தை குறைக்கலாம்.