உஷார்! அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் இப்படி '1' ஆபத்து இருக்கு!!

Aluminium Cookware Health Risks : அலுமினிய பாத்திரத்தில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்கிறார்கள். அது ஏன்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

harmful effects of cooking in aluminium vessels in tamil mks
Aluminium Cookware Health Risks in Tamil

நாம் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக தான் விரும்புவோம். தினமும் தியானம், யோகா, உடற்பயிற்சி போன்ற பலவிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இது தவிர, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுகிறோம். அதாவது, காலை முதல் இரவு வரை என ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே நாம் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் நாம் கவனிக்காத ஒன்று விஷயம் எதுவென்றால், அது நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரம் தான். ஆம், நாம் சமைக்கும் பாத்திரம் சரியானதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

harmful effects of cooking in aluminium vessels in tamil mks
side effects of aluminium vessels in tamil

அந்த வகையில், பெரும்பாலான இந்திய வீடுகளில் அலுமினிய பாத்திரத்தில் தான் உணவு சமைப்பார்கள். ஆனால், அலுமினிய பாத்திரத்தில் உணவை சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்லுகிறார்கள் தெரியுமா? இதுவரை இது பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


Cooking in aluminium vessels in tamil

அலுமினிய பாத்திரத்தில் ஏன் சமைக்க கூடாது?

அலுமினிய பாத்திரத்தை இரும்பு ஸ்க்ரப் கொண்டு சுத்தம் செய்யும் போது அதிலிருந்து உலோகங்கள் நீங்கும். பிறகு அந்த பாத்திரத்தில் உணவு சமைக்கும் போது அலுமினிய துகள்கள் உணவுடன் சேர்ந்து நம்முடைய உடலுக்குள் செல்கின்றது. இதனால் வயிற்றுப்போக்கு, அஜீரணம், சரும பிரச்சனை, அமிலத்தன்மை போன்ற பல உடல்நல பிரச்சனைகளை  ஏற்படுத்தும். 

Aluminium exposure health effects in tamil

அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதால் ஏற்படும் விளைவுகள்:

மூளை பாதிக்கப்படும்:

அலுமினியம் பாத்திரத்தில் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மூளை மோசமாக பாதிக்கப்படும். முடிவில் மூளை நோய்கள் மற்றும் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்:

அலுமினிய பாத்திரத்தில் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் துகள்கள் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்யும். இதனால் அல்சைமர் நோய் ஏற்படும்

அதிகப்படியான சோர்வு ஏற்படும்:

தொடர்ந்து அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால் திடீரென அதிகப்படியான சோர்வு ஏற்படும்.

Harmful effects of aluminium cookware in tamil

சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்:

அலுமினிய பாத்திரத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தால் பெருங்குடல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிறுநீரகங்களும் பாதிக்கப்படும்.

புற்றுநோய் ஆபத்து!

அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று எந்த ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை என்றாலும், அதிகப்படியான அலுமினிய பாத்திரத்தை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் அபாயம் உள்ளது என்று மக்கள் மத்தியில் பரவலாக பரவி உள்ளது.

புளிப்பு பொருட்களால் ஆபத்து!

அலுமினிய பாத்திரத்தில் தக்காளி, எலுமிச்சை போன்ற புளிப்பான பொருட்களை சமைத்தால், அலுமினியத்தில் இருக்கும் அயனியாக்கம் உணவுடன் கரைந்து உடலுக்கு நுழைந்து ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

Latest Videos

click me!