Sani Peyarchi 2022
சனி பெயர்ச்சி 2022
ஜோதிடத்தில், இந்த இரண்டு கிரகங்களும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இந்த கிரகங்களின் நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.
ஜூலை மாதத்தில், கிரகங்களான சனி மற்றும் சூரியன் இருவரும் தங்கள் நிலைகளை மாற்றியுள்ளனர். சனிப்பெயர்ச்சியும் சூரியப் பெயர்ச்சியும் வெறும் 5 நாட்களில் நடந்தன. அந்தவகையில் தற்போது சனி தனது ராசியை மாற்றி மகர ராசியில் பிரவேசித்துள்ளார். அதேபோல் சூரியனும் கடக ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த நிலை சமசப்தம யோகத்தை உண்டாக்குகிறது. இந்த யோகத்தால் நான்கு ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க....August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்த மூன்று ராசிகளுக்கு... வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
sani peyarchi 2022
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சனியுடன் சூரியன் கூட்டணி வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக அரசு வேலை செய்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். அதே நேரத்தில், வேலை தேடுபவர்கள் தங்கள் விருப்பப்படி வேலை பெறலாம்.தொழிலில் அதிக முன்னேற்றம் இருக்கும். பெரிய அளவில் பலன் இருக்காது என்பதால், முடிந்த அளவு பயணத்தைத் தவிர்க்கவும். வாழ்வில் புது ஒளி உண்டாகும்.
sani peyarchi 2022
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியுடன் சூரியன் கூட்டணியால் மிகவும் சிறப்பாக யோகம் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். முதலீடு செய்பவர்களும் பலன் கிடைக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.