சமந்தாவின் காலை உணவு
காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகும், ஏனெனில் இது உங்கள் உற்பத்தித்திறன் அளவை அமைக்கிறது. எனவே காலை உணவை மிகவும் ஆரோக்கியமான உணவாக மாற்றுவது நல்லது. சமந்தா, ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் ஃபிட்டாக இருப்பதற்காக ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி வருகின்றனர்.
காலை உணவு உங்களின் முதல் உணவாக இருப்பதால், அது ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். இதை எப்படி கூடுதல் ஆரோக்கியமானதாக மாற்றுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், சமந்தாவின் குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து சமந்தாவே ஒருமுறை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நட்ஸ் மற்றும் விதைகளால் சேர்க்கப்பட்ட பழங்களை தான் சமந்தா காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்.
வாழைப்பழங்கள், ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, உங்களுக்கு விருப்பமான பிற பழங்கள் (எ.கா., கிவி, மாம்பழம் அல்லது ஆப்பிள்கள்), நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் சியா விதைகள் ஆகியவற்றை சேர்த்து இந்த அருமையான காலை உணவை தயாரிக்கலாம். வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும்.