உலகின் மிகவும் விலை உயர்ந்த தனியார் குடியிருப்பு இல்லமான ஆன்டிலியா, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. 27 மாடி கட்டிடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பமான நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா அம்பானி, பிருத்வி அம்பானி மற்றும் வேதா அம்பானி ஆகியோர் வசிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு அம்பானி குடும்பம் ஆண்டிலியாவிற்கு குடிபெயர்ந்த போது, வீட்டின் மதிப்பிடப்பட்ட விலை 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. ஆண்டிலியா அதன் அம்சங்கள், ஆடம்பரமான நிகழ்வுகள், பாதுகாப்பு மற்றும் பல காரணங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருகிறது.