Honeymoon Spots
தேனிலவு என்பது ஒரு பாரம்பரிய உணவு அருந்தும் முறையிலிருந்து மாறி காதல், விடுமுறை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. முந்தைய காலத்தில் தம்பதிகள் தங்கள் தேனிலவு என்ற பெயரில் கருவுறுதல் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்க தேன் சார்ந்த பானத்தை அருந்துவார்கள். இன்றய தம்பதிகள் சுற்றங்களில் விடுபட்டு தனிமையில் துணையுடன் இருக்கவும், பயணத்தின் போது துணையுடன் வாழ்நாள் முழுமைக்குமான பசுமையான நினைவுகளை உருவாக்குவதாக தேன்நிலவுக்கு செல்கின்றனர்.
உங்கள் பட்ஜெட்டில் சர்வதேச தேனிலவு இடங்கள் இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மலையேற்றத்தை விரும்பினாலும் சரி, அல்லது கடற்கரையில் வெறுமனே உங்கள் துணையுடன் கால் நினைக்க விரும்பினாலும் சரி கம்மி செலவுல தேனிலவுக்கு போக அருமையான இடங்கள் இதோ..
Singapore
சிங்கப்பூர் பல தம்பதிகளுக்கு ஒரு கனவு தேசமாக உள்ளது, பார்க்க வேண்டிய காதல் இடங்கள் மற்றும் வசீகரிக்கும் காட்சிகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது சிங்கப்பூர். சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்ற இடமாக சிங்கப்பூர் திகழ்கிறது.
சிங்கப்பூருக்கு தேன்நிலவு செல்ல நினைக்கும் ஒரு ஜோடிக்கு 90 ஆயிரம் முதல் 2.26 லட்சம் வரை செலவாகலாம்.
வியட்நாமுக்கு முதல் முறையாக டூர் போறீங்களா.. மிஸ் பண்ணக்கூடாத இடங்கள் என்ன?
Mauritius and Reunion Island
உங்கள் துணையுடன் ஒரு சாக தேனிலவுக்கு செல்ல விருப்பமா? அப்போ இந்த இடத்தை தேர்வு செய்து பாருங்கள். மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் தீவு. இங்கு, கடற்கரையில் கால் நனைத்தபடி வான் அழகையும், தொடுவானத்தையும் ரசிக்கலாம். காலத்தை மறந்து பேசிக்கொண்டே இருக்கலாம். சாகச விரும்பிகளுக்கு திமிங்கலங்களைக் கண்டறிவது மற்றும் வானத்தில் பாராகிளைடிங் செய்தல், சப்-ஸ்கூட்டர்களில் கடல் தளத்தை கிழித்துகொண்டு பறத்தல், எரிமலையின் விளிம்பிற்கு நடைபயணம் செய்வது போன்ற முடிவில்லாத சாகசங்களைப் பகிர்ந்து கொண்டு அழகான நினைவுகளை சேமிக்கலாம்.
மொரிஷியஸ்க்கு தேனிலவு செல்ல நினைக்கும் ஒரு ஜோடிக்கு 1.8 லட்சம் ரூபாய் முதல் ஒரு 2 லட்சம் வரை ஆகலாம்.
Malaysia
பிரமிக்க வைக்கும் தீவுகள், இயற்கை காட்சி போல் காட்சியளிக்கும் கடற்கரைகள் மற்றும் நம்பமுடியாத வனவிலங்குகள் ஆகியவற்றைக் கண்டு வியக்க வேண்டுமா மலேசியாவுக்கு செல்லலாம்.! இந்த பூலோக சொர்க்கம் உங்களை வாயடைத்து மேலும் மேலும் விரும்பும் மறக்க முடியாத தேனிலவுக்கு ஏற்ற இடம். மறைந்திருக்கும் தீவுகளில் தொலைந்து உங்கள் தேடுங்கள், பசுமையான காடுகளில் பயணம் செய்தல், மேலும் உங்கள் துணையுடன் அட்ரினலின்-பம்ப் செய்யும் நீர் விளையாட்டுகளையும் அனுபவிக்கவும்.
மலேசியாவுக்கு தேனிலவு செல்ல நினைக்கும் ஒரு தம்பதிக்கு 90 ஆயிரம் முதல் 1.2 லட்ச ரூபாய் வரை செலவாகலாம்.
Thailand
எழில் கொஞ்சும் இயற்கைக்காட்சிகள், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் படிகம் போன்ற தெள்ளத்தெளிவான நீர் ஆகியவற்றுடன் தாய்லாந்தில் நீங்களும் உங்கள் துணையுடன் அழகழகான நினைவுகளை உருவாக்கலாம். இது மிகவும் பிரபலமான தேனிலவு இடங்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. பலரின் விருப்பத்தேர்வாக தாய்லாந்து இருப்பதில் ஆச்சரியமில்லை. ராய் லீயின் மூச்சடைக்கக்கூடிய குகைகள், துடிப்பான பவளப்பாறைகள், டர்க்கைஸ் நீரில் பயணம் மற்றும் பல உற்சாகமான நீர் விளையாட்டுகளுடன் உங்கள் துணையை எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கலாம்.
தாய்லாந்து செல்ல நினைக்கும் ஒரு தம்பதிக்கு 90 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை செலவாகலாம்.