திரௌபதிக்கு கிருஷ்ணரின் வரம்..
மகாபாரத புராணத்தின் படி, ஒருமுறை கிருஷ்ணர் பட்டம் விட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது நூல் அறுந்து கிருஷ்ணரின் விரல் வெட்டப்பட்டதாம். இரத்தம் அதிகமாக வெளியேற தொடங்கியதால், அங்கே இருந்த திரௌபதி தனது புடவையின் ஓரத்தை கிழித்து அண்ணனின் விரலில் கட்டினாராம். மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணர் உனக்கு ஒரு சகோதரனாக எல்லா வகையிலும் உதவி செய்வேன் என்று வரம் அளித்தாராம்.
சாந்தோஷி மாதா கதை..
சிவ புராணத்தின் படி, கணேஷனுக்கு அவரது சகோதரி ஒரு முறை ரக்ஷ பந்தன் கட்டினாராம். அதைப் பார்த்த கணபதியின் மகன்களான சுபம், லாபம் தங்களுக்கும் ராக்கி கட்ட வேண்டும் என்று விரும்பினார்களாம். எங்களுக்கு சகோதரி இருந்தால் கட்டுவோம் என்றார்களாம். அப்போது கணபதி தனது தெய்வீக சக்தியால் ஒரு பெண்ணைப் படைத்தாராம். அவர்தான் சாந்தோஷி மாதா. அப்போது சுபம், லாபம் இருவரும் சாந்தோஷி மாதாவிற்கு ராக்கி கட்டினார்கள் என்று புராணம் கூறுகிறது.
மகாலட்சுமிக்கு பலி அளித்த வரம்..
ஒரு புராணத்தின் படி, மகாபலி சக்கரவர்த்தி விஷ்ணுவுக்காக கடுமையான தவம் செய்தார். அவரின் வரத்தால் மகிழ்ச்சியடைந்த விஷ்ணு அவர் முன் வேண்டிய வரத்தை கேட்க சொன்னார். எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று மகாபலி கேட்டார். மகா விஷ்ணு அவருடனே இருந்துவிட்டார். ஆனால் விஷ்ணு வராததால் விஷயம் தெரிந்த லட்சுமி தேவி மகாபலி சக்கரவர்த்தியிடம் ஒரு ஏழைப் பெண் வேடத்தில் வந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணிடம் என்ன ஆனது மகாபலி கேட்க, தனக்கு அண்ணன் இல்லை என்று வருந்தினார். இதனால் மகாபலி தன்னையே அண்ணனாக நினைத்து ராக்கி கட்டிக் கொண்டார். பிறகு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் தனது உண்மையான ரூபத்தை காட்டி விஷ்ணுவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டார். மகாலியும் தான் கொடுத்த வாக்கின் படி விஷ்ணுவை அனுப்ப, இருவரும் வைகுண்டம் சென்றார்களாம்.
தர்மராஜாவும் ரக்ஷா பந்தன் கட்டினார்...
மகாபாரதப் போரின் போது தர்மர் மிகவும் கவலையடைந்தாராம். கிருஷ்ணரிடம் சென்று படையை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அப்போது கிருஷ்ணர் அனைவரும் ரக்ஷா பந்தன் கட்ட வேண்டும் என்று கூறினார். இதனால் தர்மராஜாவும் ரக்ஷாபந்தன் கட்டிக்கொண்டு போர்க்களத்திற்கு சென்றாராம்.
இந்திரனுக்கு ரக்ஷாபந்தன்..
ஒரு புராணத்தின் படி, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது தனது கணவரைக் காப்பாற்றும்படி இந்திரனின் மனைவி இந்திராணி பகவான் கிருஷ்ணரிடம் சென்றார். அப்போது கிருஷ்ணர் கொடுத்த ரக்ஷாபந்தனை இந்திராணி தனது கையில் கட்டிக்கொண்டாராம்.