
பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் அனைவரும் அறிந்தது. ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், சோர்வில் இருந்து நம்மை மீட்டெடுக்கவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது.
அந்த வகையில் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றுதான் பப்பாளி. ரொம்பவே மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பப்பாளி சாப்பிடுவதற்கு சுவையாகவும், சத்துக்களுக்கு குறைவே இல்லாமல் இருக்கும் ஒரு பழம் என்றே சொல்லலாம். பப்பாளி நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குகின்றது. அனைத்து வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களில் இதுவும் ஒன்றாகும்.
பப்பாளி பழம் வயிற்றுக்கு ரொம்பவே நன்மை பயக்கும். இது தவிர, இந்த பழம் செரிமானத்தை மேம்படுத்தும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், முதுமையை தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் உள்ளிட்ட பல நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கும். பப்பாளி பல நன்மைகளை வழங்கினாலும் அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. மீறினால் நன்மைக்கு பதிலாக தீங்கு தான் ஏற்படும். எனவே அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் பப்பாளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்:
பால் பொருட்கள்
பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற எந்த ஒரு பால் பொருட்களையும் பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் பால்பொருட்களை ஜீரணிக்க கடினமாக்கும். இதனால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். மேலும் வாயு பிரச்சனையும் ஏற்படும்.
முட்டை
பப்பாளி சாப்பிட்ட பிறகு முட்டை ஒருபோதும் சாப்பிட கூடாது இதனால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதாவது மலச்சிக்கல், வாந்தி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பப்பாளி சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் மற்றும் பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இவற்றை ஒன்றாக சாப்பிடும்போது அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
அதிக புரதம் நிறைந்த உணவுகள்
மீன், இறைச்சி, டோஃபுவுடன் போன்று அதிக புரதமுள்ள உணவுகளுடன் பப்பாளியை ஒருபோதும் சேர்த்து சாப்பிட வேண்டாம். ஏனெனில் பப்பாளியில் புரதத்தை உடைக்கும் எஞ்சமீன்கள் நிறைந்துள்ளதால், அதிக புரதம் நிறைந்துள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனை ஏற்படும்.
குளிர்ந்த நீர்
பப்பாளி சாப்பிட்ட உடனே ஒருபோதும் குளிர்ந்த நீர் குடிக்க வேண்டாம். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி வளர்ச்சிதை மாற்றமும் பாதிக்கப்படும்.
முக்கிய குறிப்பு:
நிபுணர்களின் கூற்றுப்படி, பப்பாளியை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பப்பாளியில் நார்ச்சத்து மற்றும் பப்பெய்ன் போன்று நொதிகள் இருப்பதால், அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இதனால் வயிற்றுப் புறணியை எரிச்சல் அடைய செய்யும், தளர்வான மலத்தை ஏற்படுத்தும் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? அவசியம் தெரிஞ்சிகோங்க..