பூமியின் வேகம் மற்றும் இரவும், பகலும் மாறுவதற்கான அறிவியல் காரணத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த அறிவியல் விதிப்படி, ஒரே நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் சூரிய உதயமும், அஸ்தமனமும் நிகழாது என்பதை நம்மில் பலர் நினைத்து பார்ப்பதில்லை. ஆம், நாம் இந்தியாவில் வசிக்கிறோம் என்றாலும், நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமனமாகும் நேரம் வித்தியாசப்படும்.
சரி நாம் அனைவரும் ஒரே நாட்டில் இருந்தாலும், மற்ற எல்லா மாநிலங்களுக்கும் முன்பாக சூரிய உதயம் நடக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் எது தெரியுமா? அது தான் அருணாச்சல பிரதேசம். அதிலும் குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் தான் முதல் சூரிய உதயம் காணப்படுகிறது. இந்த நகரம் "இந்தியாவின் ஜப்பான்" என்று அழைக்கப்படுகிறது.