
அந்த காலத்தில் பெண்கள் வீடு மற்றும் வயல்களில் கடுமையாக உழைத்ததால் என்னவோ அவர்களுக்கு எந்தவிதமான உடற்பயிற்சி செய்யாமலே சுகபிரசவம் உருவானது. ஆனால் இந்த காலத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் பிரசவ காலத்தில் பெரும்பாலான பெண்கள் சிக்கலை சந்திக்கிறார்கள்.
எனவே கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இருப்பினும் அதிக எடை தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். ஆகையால், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள்
எந்தவித பக்கவிளைவுகள் இல்லாத செய்ய வேண்டிய உடற்பயிற்சி எதுவென்றால் அது நடைபயிற்சி ஆகும். இது உடற்பயிற்சிகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
உடலை வறுத்தி செய்யும் மற்ற உடற்பயிற்சிகளை காட்டிலும் நடைபயிற்சி மிகவும் சிறந்தது. இதற்கு பலன் பொறுமையாக கிடைத்தாலும், தீர்வு நிரந்தரமாக இருக்கும் .மேலும் இந்த பயிற்சிக்கு இணையாக எந்த பயிற்சியும் ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.
கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
1. கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய தசைகள் வலுப்படுத்தப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
2. நடைபயிற்சி செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இது தவிர உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.
3. கர்ப்ப கால நடைபயிற்சி செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் சாப்பிட்ட பிறகு ஏற்படும் வீக்கம், முழுமையான உணர்வை தடுக்கும்.
4. மலச்சிக்கல் கர்ப்ப காலத்தில் வரும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். எனவே தினமும் நடைபயிற்சி செய்வது மூலம் இந்த பிரச்சனையை சுலபமாக தடுக்கலாம்.
5. கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வரும் அபாயத்தை பெருமளவு தடுக்கலாம். மேலும் உயரத்த அழுத்த அபாயம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
6. கர்ப்ப கால நடை பயிற்சி சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். அதாவது நடை பயிற்சி செய்வதன் மூலம் உடல் மற்றும் தசைகள் வலுப்படுத்தப்படுகிறது. இவை நார்மல் டெலிவரிக்கு உடலை தயார் படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் எவ்வளவு நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்?
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையும், அதிகபட்சமாக மூன்று கிலோமீட்டர் தூரம் வரையும் நடக்கலாம். நடக்கும்போது ஒரேடியாக தூரத்தை அதிகரிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்ட வேண்டும். அதுபோல நீங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் நடக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து நாட்கள் மட்டுமே நடந்தால் போதும். மேலும் ஒவ்வொரு மாதத்தின் அடிப்படையில் உங்களது நடை பயிற்சியை மாற்றிக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வாக்கிங் வயசுக்கு ஏத்த மாதிரி போகனும்.. 60 வயசுக்கு மேல 'இவ்ளோ' ஸ்டெப்ஸ் நடந்தாலே ஆரோக்கியம் தான்!!
முக்கிய குறிப்பு:
கர்ப்பகால நடப்பயிற்சி செய்யும் போது வசதியான காலணிகளை அணிய வேண்டும். உடலை எப்போதுமே நீரேற்றமாக வைக்க வேண்டும். எனவே, நடைப்பயிற்சி செய்யும் போது கையில் வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நடைபயிற்சி செய்வதற்கு முன்பாக வாழைப்பழம், ஆப்பிள், சுண்டல், காய்கறி சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதிவேகமாக ஒருபோதும் நடக்க வேண்டாம் பொறுமையாக நடந்தால் போதும். முக்கியமாக நடக்கும் போது தனியாக நடக்காமல் ஒருவரின் துணையுடன் நடக்கவும்.
இதையும் படிங்க: வெறும் வாக்கிங் பத்தாது.. நடைபயிற்சி கூட இந்த '5' விஷயங்களை பண்ணா தான் பலன்கள்!!