இரும்பு கடாயில் சமைக்கவே கூடாத உணவுகள் இவை.. விஷமா மாறலாம் உஷார்!
இந்திய வீடுகளில் சமையலுக்கு பல வகையான பாத்திரங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் காலப்போக்கில் பாத்திரங்களியில் மாற்றங்கள் வந்துள்ளன. இருந்தபோதிலும் இரும்பு, எஃகு போன்ற பாத்திரங்களில் இன்னும் பலரது வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பலர் உணவுகளை சமைக்க இரும்பு கடாயை பயன்படுத்துகிறார்கள். மேலும் உடலில் இரும்புச்சத்து குறைபாடு பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இரும்பு பாத்திரங்களில் உணவே சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு மேம்படும். ஆனால், எல்லா வகையான உணவுகளையும் இரும்பு சட்டியில் சமைக்கக் கூடாது. அந்தவகையில், இரும்பு கடாயில் என்னென்ன உணவுகளை சமைக்கக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
25
முட்டை :
முட்டையை இரும்பு கடாயில் சமைக்கும் போது அது அதில் ஒட்டிக் கொள்ளும். இதனால்தான் முட்டை இரும்பு கடாயில் சமைக்க கூடாது.
தக்காளி அதிக அமலத்தன்மை கொண்டதால், கடாயில் இருக்கும் இரும்பு உணவுடன், சுவையை மாற்றிவிடும். மேலும் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுத்தும். இதனால் தான் தக்காளியை இரும்பு கடாயில் சமைக்க கூடாது என்று சொல்லுகிறார்கள்.
பன்னீர் போன்ற பால் பொருட்களை இரும்பு கடாயில் சமைக்கும் போது அது உடைந்து போகும். மேலும் இது சுவையை மாற்றிவிடும். இரும்பு கடாயில் சமைத்த பால் பொருட்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
55
மீன் :
மீன் மென்மையானது. மேலும் இது கடாயில் ஒட்டும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இதை இரும்பு கடாயில் சமைத்தால் உடைந்து போகும். எனவே இரும்பு கடாயில் ஒருபோதும் மீன் சமைக்க வேண்டாம்.