சுற்றுலா பிரியர்கள் மிஸ் பண்ணக்கூடாத சூப்பரான 5 இடங்கள்.. எங்கு இருக்கு தெரியுமா?

First Published Jan 21, 2023, 9:43 PM IST

நாம் அனைவரும் பயணத்திற்கு என்று பல நேரங்களில் திட்டமிடுவோம். அது சில நேரங்களில் மட்டுமே சரியாக அமையும். மலைவாசஸ்தலங்களின் குளிர்ந்த காற்றை ரசிக்க சுற்றுலா பிரியர்களுக்கென சூப்பரான 5 இடங்களை இந்த பதிவில் காணலாம்.

1. நைனிடால்

நைனி ஏரிக்கு பெயர் பெற்ற நைனிடால், வார இறுதி விடுமுறைக்கு சிறந்த இடமாகும். காலப்போக்கில், இந்த இடம் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக மாறியிருக்கிறது. டெல்லியிலிருந்து 7 மணி நேரத்தில் நைனிடாலை அடையலாம். டெல்லியிலிருந்து நைனிடால் வரையிலான தூரம் 303 கி.மீ. நைனிடாலுக்குச் செல்லும்போது, சுமார் 2 மணிநேர தூரத்தில் அமைந்துள்ள ஜிம் கார்பெட் பூங்காவிற்குச் செல்ல மறக்காதீர்கள்.

2. முசோரி

டெல்லிக்கு அருகாமையில் உள்ள மற்றொரு அழகான இடமாக முசோரி உள்ளது. டேராடூனுக்கு சற்று மேலே முசோரி அமைந்துள்ளது. இங்குள்ள குளிர்ந்த காற்றும், சுற்றுலாத் தலங்களும் சுற்றுலா பிரியர்களுக்கு சிறந்த பயணமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. முசோரிக்கு மிக அருகில் உள்ள சமவெளியிலிருந்து ஒரு அற்புதமான நுழைவாயிலான லாண்டூரையும் நீங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும். டெல்லி முதல் முசோரி வரையிலான இருக்கும் பயண தூரம் 276 கி.மீ ஆகும்.

3. கசௌலி

டெல்லியில் இருந்து சுமார் ஆறு மணி நேரத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் கசௌலி ஆகும். தௌலாதார் மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் அதன் அழகிய காட்சிகளுக்கு பெயர் பெற்றது. இது தவிர, இது ஒரு மத ஸ்தலமாகவும் மிகவும் பிரபலமானது, எனவே நீங்கள் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டால், இந்த இடத்தை மறக்காமல் செல்ல வேண்டிய இடமாகும். டெல்லியிலிருந்து கசௌலி வரையிலான தூரம் 288 கி.மீ ஆகும்.

4. ரிஷிகேஷ்

ரிஷிகேஷிற்குச் நண்பர்களுடன் மறக்காமல் செல்லுங்கள். ரிஷிகேஷில் ரிவர் ராஃப்டிங் தவிர, இங்குள்ள ஆற்றங்கரையில் என்ஜாய் செய்யலாம். டெல்லியிலிருந்து ரிஷிகேஷிற்கு 240 கி.மீ தூரம் ஆகும்.

5. டேராடூன்

டேராடூன் உத்தரகண்டின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும். டேராடூன் கடல் மட்டத்திலிருந்து 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் வானிலை மிகவும் இனிமையானதாக இருக்கும். முசோரியில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள டேராடூன் முசோரி மற்றும் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாருக்கான நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

click me!