இந்தியாவில் உச்சகட்ட கொடூரம்... இன்று மட்டும் எத்தனை லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

First Published Apr 11, 2021, 12:31 PM IST

தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைப் போலவே இந்த ஆண்டும் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் கோரதாண்டவம் அதிகரிக்க வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.
undefined
இதனால் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
undefined
தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
undefined
ஒரே நாளில் 839 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 90,584 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,20,81,446 ஆக உயர்ந்துள்ளது.
undefined
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11, 08,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
undefined
click me!