யம்மாடியோவ்..இவரின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் வாயை பிளந்த நெட்டிசன்கள்..!

First Published | Sep 29, 2022, 2:50 PM IST

Kylie Jenner: உலகின் பிரபல மாடல் கைலி ஜென்னர் தன்னுடைய ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு, கோடி கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர போஸ்ட் போடுவதற்கு லச்சக்கணக்கில் வாங்கும் பிரபலங்களில் உள்ளூரிலேயே இருக்கிறார்கள். அதே போன்று, சர்வதேச பிரபலங்கள் ஒரு போஸ்டிற்கு பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அந்த வரிசையில், கைலி ஜென்னர் முதல் இடத்தில இருக்கிறார். 

 மேலும் படிக்க..Relationship: பெண்களிடம் இருக்கும் எவை ஆண்களை அதிகம் லைக் பண்ண வைக்குது தெரியுமா.? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

 அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், தொழில் அதிபருமான கைலி ஜென்னர் சமூக ஊடகங்களில் எப்போதும் பரபரப்பாக இருப்பவர். இவர் அடிப்படையில் ஒரு மாடல் ஆவார். இவருக்கு என்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


 சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராம் மூலம் இளம் வயதில் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். இவரை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 370 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின் தொடர்கிறார்கள்.

இவர் அடிக்கடி சர்சைக்குரிய புகைப்படம் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில் தற்போது, இவர் தன்னுடைய ஒரு பதிவுக்கு இவருக்கு கிடைக்கும் தொகை சுமார் 15 கோடியாகும். 

 மேலும் படிக்க..Relationship: பெண்களிடம் இருக்கும் எவை ஆண்களை அதிகம் லைக் பண்ண வைக்குது தெரியுமா.? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

இதன் மூலம் 25 வயதிலேயே அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக செலினா கோமஸ், கிம் கர்தாஷியன், அரியான, பியான்சே, இக்ளோயி ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறார்கள்.

 மேலும் படிக்க..Relationship: பெண்களிடம் இருக்கும் எவை ஆண்களை அதிகம் லைக் பண்ண வைக்குது தெரியுமா.? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

Latest Videos

click me!