Relationship: பெண்களிடம் இருக்கும் எவை ஆண்களை அதிகம் லைக் பண்ண வைக்குது தெரியுமா.? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

First Published | Sep 29, 2022, 1:50 PM IST

Relationship Tips: பெண்களிடம் இருக்கும் எவை ஆண்களை அதிகம் கவர்கிறது தெரியுமா..? என்பது குறித்த கேள்வி உங்களுக்கு இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

வைகை புயல் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் வரும் காமெடி காட்சியில், வடிவேலு, நடிகை பாவனாவை பார்த்து என்னிடம் உள்ள எது டா, உன்னை அதிகம் லைக் பண்ண வைக்குது என்று கேட்பார். என்னிடம் உள்ள சிரிப்பா, முத்து போன்ற பற்களா..? நளினம் கொண்ட நடையா...? முரட்டு உடம்பா ?, கட்டுடல் மேனியா ..? எதுடா என்று கேட்டு இருப்பார்.

மேலும் படிக்க...Relationship Tips: பெண்களே உஷார்..! நீங்கள் பக்கத்தில் இருக்கும் போதே உங்கள் கணவர் வேறொரு பெண்ணை பார்க்கிறாரா?

அதே பாணியில், சமீபத்தில் வெளிவந்த ஆய்வு முடிவு ஒன்றில் பெண்களிடம் இருக்கும் எவை ஆண்களை அதிகம் கவர்கிறது தெரியுமா..? என்பது குறித்த கேள்விக்கு விளக்கம் கிடைத்துள்ளது. உறவில் பெண் ‘தேவை' என்று உணர ஆண்கள் விரும்புவதாக உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tap to resize

அதில் அழுத்தமான் குரலுடன் தைரியமாக பேசும் பெண்களையும், புத்திசாலித்தனமாக ஸ்மார்ட் பெண்களையும் தான் ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். ஏனெனில்,  அவர்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கொண்ட நடப்பவர்களாக இருக்கிறார்களாம்.

குறிப்பாக, உரையாடும் போது மற்றவர்களை எவ்வளவு சரியாக உள்வாங்கிக் கொண்டு பேசுகிறார்கள் என்பதை ஆண்கள் தீவிரமாக கவனிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படுமாம். எதையும் துணிச்சலுடன், நின்று செய்து முடிப்பவர்களாக இருப்பார்களாம். குறிப்பாக தங்களுக்கு வாழ்வில் பிரச்சனை வரும் போது உறுதுணையாக இருப்பார்களாம்.

மேலும் படிக்க...Relationship Tips: பெண்களே உஷார்..! நீங்கள் பக்கத்தில் இருக்கும் போதே உங்கள் கணவர் வேறொரு பெண்ணை பார்க்கிறாரா?

வேலை, உறவு என எல்லாவற்றிலும் புதிய முயற்சிகளை தைரியமாக எதிர் கொள்பவர்களையும், நகைச்சுவை உணர்வு கொண்ட பெண்களையும் தான் ஆண்கள் அதிகமாக விரும்புகிறீர்களாம். ஏனெனில், குடும்பத்தில் எத்தகைய பெரிய பிரச்சனை இருந்தாலும்,நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எளிதில் சரி செய்து விடுவார்களாம்.

இந்த பதிவை நீங்கள் படித்து கொண்டிருந்தால், உங்கள் மனைவி அல்லது காதலியின் எந்த குணம் உங்களை வெகுவாக கவர்ந்தது என்பதை சிந்தித்து  பாருங்கள்.

மேலும் படிக்க...Relationship Tips: பெண்களே உஷார்..! நீங்கள் பக்கத்தில் இருக்கும் போதே உங்கள் கணவர் வேறொரு பெண்ணை பார்க்கிறாரா?

Latest Videos

click me!