Relationship Tips: பெண்களே உஷார்..! நீங்கள் பக்கத்தில் இருக்கும் போதே உங்கள் கணவர் வேறொரு பெண்ணை பார்க்கிறாரா?
Relationship Tips: மனைவி பக்கத்தில் இருந்தாலும் மற்ற பெண்களைப் பார்ப்பது ஆண்களின் இயல்பான குணம். இதனால் அருகில் உள்ள மனைவிக்கு எரிச்சல் ஏற்படும். எதனால் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயல்பாகவே பல ஆண்களுக்கு மனைவியை தவிர்த்து மற்ற பெண்களை பார்த்து அழகை ரசிக்கும் பழக்கம் உள்ளது. கணவனின் இந்த செயல் மனைவிக்கு பிடிக்காது. என் கணவர் எப்போதும் என்னை மட்டும் பார்க்க வேண்டும், என்னிடம் மட்டுமே ஈர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனைவிக்கு இருக்கும். இதை ஆண்களிடம் கூறும்போது நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
அழகைப் பார்ப்பதா, அதில் என்ன தவறு என்பதுதான் ஆண்களின் கேள்வி. ஆனால், உண்மையில் இந்த செயல் உங்கள் மனைவியை காயப்படுத்தும் என்பதை என்றைக்காவது நீங்கள் சிந்தித்தது உண்டா..? ஆம் கணவன் மற்ற பெண்களின்பால் ஈர்க்கப்பட்டால் மனைவி மனம் உடைந்து போவாள் என்பதும் உண்மை.
உங்கள் கணவர் மீது நம்பிக்கை இல்லாததே உங்கள் பிரச்சனைக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக கணவன் மற்ற பெண்களைப் பார்ப்பதால், நீங்கள் அவர்களுடன் சண்டையிடுவீர்கள். சண்டையிடுவதற்குப் பதிலாக, மற்ற பெண்களைக் கண்டால் நீங்கள் எவ்வளவு வருத்தப்படுவீர்கள் என்று அவர்களுக்கு சொல்லுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
பல விஷயங்கள் மனம் திறந்து பேசி, விவாதிப்பதன் மூலம் தீர்க்கப்படுகின்றன. பேசுவதற்குப் பதிலாக, சந்தேகம் மற்றும் சண்டை இருவருக்கும் இடையிலான உறவைக் கெடுக்கும். உங்கள் மனம் மேலும் மோசமடையும் என்கின்றனர் நிபுணர்கள். திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம்.
அதேபோன்று, சில நேரம் கணவன்- மனைவி உங்கள் துணையிடம் தெரியாமல், கூட நீங்கள் மறைக்கும் விஷயங்கள் அவர்களை மிகவும் புண்படுத்தும். நீங்கள் அதை உணராமல் இருக்கலாம். எனவே, இதனை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால், இருவருக்கும் இடையே மரியாதை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாக பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்லாததை உணரும் போது, இது போன்ற எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பெண்கள் ஒரு ஆண் மற்ற பெண்களைப் பார்ப்பது சகஜம். அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கணவர் உங்களை நேசிக்கவில்லை என்று சொல்ல முடியாது. சுற்றியுள்ள பொருட்களையும் மக்களையும் பார்க்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. கணவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், அவரைக் கண்காணிக்கவும். முன்பு போலவே நடத்தை இருந்தால் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.