குளிர்காலத்தில் அடிக்கடி காய்ச்சல்? குழந்தைங்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 'இதை' கொடுங்க!
Boost Kids Immunity In Winter : குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
Boost Kids Immunity In Winter : குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
குளிர்காலத்தில் குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல் காய்ச்சலால் பாதிக்கப்படுவது வழக்கம். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக குழந்தைகளின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும்.
பருவகால தொற்று நோயிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் பல விஷயங்களை முயற்சி செய்கிறார்கள். ஆனால் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய் படுகிறார்கள். உங்கள் குழந்தையும் குளிர்காலத்தில் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்களா? அப்படியானால் குளிர்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
பழங்கள்:
குளிர்காலத்தில் குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழங்களை கொடுப்பது மிகவும் நல்லது. ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை அவர்களுக்கு கொடுக்கலாம். ஏனெனில் அவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அது குளிர்காலத்தில் வரும் பல நோய்களை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. ஒருவேளை உங்கள் குழந்தை பழம் சாப்பிட விரும்பவில்லை என்றால், அதில் ஜூஸ் போட்டு கொடுக்கலாம்.
தயிர்:
இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆம், குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் கொடுப்பது ரொம்பவே நல்லது. தயிர் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தயிரில் போதுமான அளவு கல்சியம் உள்ளது. இது குழந்தைகளின் எலும்புகளை பலப்படுத்துகிறது.
பெர்ரிகள்:
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் குழந்தைங்க சருமம் வறண்டு போகுதா? பட்டுப் போல மாற பெற்றோர் செய்ய வேண்டியது இதுதான்!!
பச்சை காய்கறிகள்:
குளிர்காலத்துகள் சத்துக்கள் இருந்த பச்சை காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மேலும் அவற்றில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே குழந்தைகளின் உணவில் கீரை, முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி வைட்டமின் கே போன்ற பல சத்துக்கள் இதில் உள்ளன. இந்த காய்கறிகளை நீங்கள் குழந்தைகளின் உணவில் அல்லது சூப் செய்து கொடுக்கலாம். அவை சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இஞ்சி
இஞ்சியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலப்படுத்துகிறது. இஞ்சி உடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் உங்கள் குழந்தைகள் குளிர் காலத்தில் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளை பாதிக்கும் குளிர்கால காது வலி.. எப்படி தடுப்பது?