
குளிர்காலத்தில் மக்கள் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே இந்த சீசனில் அவர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவில் பல்வேறு மாற்றங்களை செய்கிறார்கள். சொல்லப்போனால் சீசனுக்கு ஏற்ப சில விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்வது ரொம்பவே நல்லது.
அந்த வகையில், குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் ஒன்று மட்டுமல்ல உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்க உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: பாலில் பேரீச்சம்பழம் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?!
எலும்புகளுக்கு நன்மை பயக்கும்:
குளிர்காலத்தில் பெரும்பாலானார் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் குறைந்தளவு பேரிச்சம்பழம் சாப்பிடலாம். மேலும் குளிர்காலத்தில் சூரிய ஒளி பெறுவது கடினம் என்பதால், உடலில் வைட்டமின் டி குறைபாட்டை போக்க பேரீச்சம்பழம் உங்களுக்கு உதவும். மேலும் இதில் இருக்கும் கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது. இது தவிர, இதில் பொட்டாசியம் பாஸ்பரஸ் நியூஸ் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
குளிர்காலத்தில் மாரடைப்பு ஆபத்து அதிகமாக வரும். எனவே குளிர்காலத்தில் உங்களது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து பேரிச்சம்பழத்தில் உள்ளது. இவை செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே செரிமான அமைப்பு பலவீனமான உள்ளவர்கள் குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மூளைக்கு நல்லது
பேரிச்சம்பழம் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன அவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது தவிர இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு ரொம்பவே நல்லது.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா? இது சர்க்கரை அளவை அதிகரிக்குமா?
எடையை குறைக்க உதவுகிறது:
நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் பெருஞ்ச பழம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் மற்றும் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். இதன் மூலம் உங்களுடைய அடைய சுலபமாக குறைத்து விடலாம்.
சளி, இருமலுக்கு நல்லது
குளிர்காலத்தில் சளி, இருமல் வருவது சகஜம். எனவே இதிலிருந்து நிவாரணம் அளிக்க பேரிச்சம்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி சளி இருமலை தடுக்கும்.
ரத்த குறைபாட்டை போக்கும்
குளிர்காலத்தில் ரத்த சோகையால் அவதிப்படுபவர்களுக்கு பேரிச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகளுக்கு குளிர்காலத்தில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தால் பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடலாம். பேரிச்சம்பழம் இனிப்பாக இருந்தாலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இது கிளைசெமிக் குறியீடு ரொம்பவே குறைவு.