Lemon Benefits In Tamil
எலுமிச்சையை அசைவ உணவுகளில் பிழிந்துவிட்டு சமைப்பார்கள். உணவுக்கு பின் எலுமிச்சை சாறு குடிப்பது உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்தும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. வைட்டமின் சி அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய சத்தாகும்.
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின் 'சி' மேம்படுத்தும். இது மட்டுமின்றி எலும்புகள், தோல் பராமரிப்பு, கண்கள் போன்றவைக்கும் எலுமிச்சை நன்மை செய்கிறது. எலுமிச்சை தோல் கசப்பாகவும், அதன் சாறு புளிப்பாகவும் இருக்கும்.
Lemon Benefits In Tamil
இரத்த அழுத்தம்:
எலுமிச்சைப் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். பொட்டாசியம் இதய கோளாறுகளை தடுக்கவும் உதவுகின்றது. தசைகள் நன்கு இயங்க பொட்டாசியம் குறிப்பிட்ட வகையில் உதவுகிறது.
Lemon Benefits In Tamil
நச்சு நீக்கி:
உடலில் இருந்து நச்சுகளை நீக்கும் அற்புத பொருள் என்றே எலுமிச்சையை சொல்லலாம். உணவில் எலுமிச்சை சாறு பிழிந்து உண்பதால் தேவையில்லாத நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்ற முடிகிறது. இதனால் உடலில் தேவையில்லாத கழிவுகள் தேங்காது. முக்கியமாக சிறுநீரக கற்கள் வராமல் முன்கூட்டித் தடுக்க உதவுகின்றன. கல்லீரலில் நச்சுக்கள் சேராமல் தடுக்க உதவுகிறது.
Lemon Benefits In Tamil
செரிமானம் மேம்படும்:
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, வைட்டமின் பி6-ம் உள்ளது. காப்பர், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை காணப்படுகின்றன. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவராக இருந்தால் சாலட், பொரியல், மீன், சிக்கன் போன்றவற்றில் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்வது நல்லது. இது உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்தும். அஜீரண கோளாறுகளை சரி செய்யும். நீங்கள் உண்ணும் மற்ற உணவுகளில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்ச உதவுகிறது.