குளிர்காலத்தில் கட்டாயம் வெல்லம் சேர்க்கனுமாம்..  பலருக்கும் தெரியாத '5' காரணங்கள்!! 

First Published | Nov 20, 2024, 4:43 PM IST

Jaggery Benefits In Winter : வெல்லத்தை குளிர்கால உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 

Jaggery Benefits In Winter

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தலாம். அதிலும் குளிர்காலங்களில் தயாரிக்கும் தேநீர், இனிப்பு வகைகள், சில குழம்பு வகைகள் முதலியவற்றில் வெல்லம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இன்னும் நில கிராமங்களில் இந்த பாராம்பரியம் பின்பற்றப்படுகிறது.

இதில் ஏராளமான மருத்துவ  நன்மைகள் காணப்படுகின்றன. இதில் உள்ள ஆற்றல் நம் உடலில் உள்ள ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதன் காரணமாகவே குளிர்காலத்தில் வெல்லம் உண்ண பரிந்துரை செய்யப்படுகிறது. முழுவிவரங்களை இந்த பதிவில் காணலாம். 

Jaggery Benefits In Winter

நோய் எதிர்ப்பு சக்தி:

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வெல்லம் உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது. பருவகாலங்களில் அதிகம் காணப்படும் தொற்றுநோய்களான ஜலதோஷம், காய்ச்சலை எதிர்த்து போராட உதவும்.  

Tap to resize

Jaggery Benefits In Winter

வெல்லம் உடலுக்கு சூட்டை தருமா? 

வெல்லத்தில் வெப்பத்தை உண்டாக்கும் பண்புகள் உள்ளதாக ஆயுர்வேதம் கருதுகிறது. இதன் காரணமாகவே குளிர்காலத்தில் உண்ண ஏற்றது. உங்களுடைய உணவுகளில் வெல்லம் சேர்ப்பதால் உடலில் வெப்பநிலையை உயர்த்தும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. வெல்லம் குளிர்காலத்தில் இதமான உணர்வை தரும். குளிர்ந்த காலநிலை சமாளிக்க உடலுக்கு கதகதப்பு தேவை. அதைப் போலவே உடலுக்கு ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன. நாள்தோறும் உணவில் வெல்லம் சேர்ப்பதால் உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் உயரும்.

Jaggery Benefits In Winter

தசைகளை வலுவாக்கும்! 

குளிர்காலத்தில் தசைகளில் வலி எடுக்கும். ஏற்கனவே உடலில் காணப்படும் வலிகளும் தீவிரமடையும். இதை தவிர்க்க ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படும் வெல்லம் உதவும். வெல்லத்தில் உடலின் தசைகளுக்கு தேவையான இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை குளிர்காலத்தில் உடலின் இயக்கத்திற்கும், தசை செயல்பாட்டை மேம்படுத்தவும் அவசியம். 

இதையும் படிங்க:  வறுத்த கடலை, வெல்லம் சுவையே தனி..  'இப்படி' அடிக்கடி சாப்பிட்டால் எவ்ளோ நல்லது தெரியுமா?

Jaggery Benefits In Winter

செரிமானம் மேம்படும்! 

குளிர்காலங்களில் உடல் சற்று மந்தமாக தான் இருக்கும். தண்ணீர் குடிப்பதும் குறைவாக இருக்கும். இப்படி பல காரணங்களால் செரிமானம் சிக்கலாகிவிடும். நீங்கள் ஏதேனும் ஒரு வழியில் வெல்லம் உண்ணும் போது செரிமானத்திற்கு அது உதவியாக இருக்கும். வெல்லம் உங்களுடைய செரிமான நொதிகளை நன்கு தூண்டிவிடும். உங்களுடைய வயிறு தொடர்பான பிரச்சனைகளில் ஒன்றான மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருகிறது. 

இதையும் படிங்க: வெல்லத்தில் கலப்படம்; போலியை சுலபமா கண்டுபிடிக்க இந்த '1' டெக்னிக் போதும்!!

Jaggery Benefits In Winter

இரத்த அழுத்தம்: 

உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறு உள்ளவர்கள் (சர்க்கரை நோய் இல்லாதவர்கள்) குளிர்காலத்தில் கூடுதலாக சிரமப்பட நேரலாம்.   வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறுகளுக்கு நல்ல பலனளிக்கும். 

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் தேநீர், இனிப்புகள் செய்வதற்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துங்கள். உதாரணமாக எள்ளுடன், வெல்லம் சேர்த்து உண்ணலாம். இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். வெந்நீரில் வெல்லம் கலந்து குடிக்கலாம். முட்டை பயன்படுத்தாத இனிப்பு வகைகளை செய்யலாம். இப்படி பல வழிகளில் வெல்லம் பயன்படுத்துவதால் உங்களுடைய உடலில் உள்ள பல பிரச்சனைகளை குறைக்க முடியும்.

Latest Videos

click me!