குழந்தைகளை ட்ரெயினில் கூட்டிட்டு போறப்ப மறக்காமல் செய்ய வேண்டிய '5' விஷயங்கள்!!

First Published | Nov 20, 2024, 2:02 PM IST

Train Travel With Kids : நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், சில முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவை..

Train Travel With Kids In Tamil

நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வெளி ஊர்களுக்கு செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால் பஸ் அல்லது காரை விட ரயில் ரொம்பவே உதவிகரமாக இருக்கும். மேலும் சிறு குழந்தைகள் புதிய இடங்களுக்கு செல்லும்போது எப்போது இல்லாமல் சில சமயங்களில் அழ ஆரம்பித்து விடுவார்கள். இதனால் பெற்றோர்களுக்கு சங்கடத்தை தான்  ஏற்படும் மற்றும் சுற்றியுள்ளவர்களுக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால், அந்த நாளைய கெடுத்து விடும்.

Train Travel With Kids In Tamil

இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  5 வயதிற்குள் உங்க குழந்தைக்கு கண்டிப்பா சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!!

Tap to resize

Train Travel With Kids In Tamil

குழந்தைகளுடன் ரயிலில் செல்லும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

சரியான நேரத்தை தேர்வு செய்!

குழந்தைகளின் சௌகரியத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் ஏற்ற நேரத்தை தேர்வு செய்ய மறக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகள் உங்களை அதிகமாக தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

அத்தியாவசிய பொருட்கள்:

குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செல்லும் போது தேவையான அளவு தண்ணீர், மருந்துகள், தின்பண்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்ல ஒருபோதும் மறக்க வேண்டாம்.

Train Travel With Kids In Tamil

குழந்தைகளின் பாதுகாப்பு

குழந்தைகளுடன் ரயிலில் செல்லும் போது குழந்தைகளை ஒருபோதும் ரயிலின் ஜன்னல் அல்லது கதவுகளுக்கு அருகில் தனியாக விட்டு விடாதீர்கள். இல்லையெனில் அசம்பாவிதங்கள் நடந்து விடும்.

குழந்தைகளை மகிழ்வி

உங்களது ரயில் பயணம் நீண்டதாக இருந்தால் குழந்தைகளை மகிழ்விக்க அவர்களுக்குரிய புத்தகங்கள், பொம்மைகள் அல்லது விளையாட்டு பொருட்களை கூடவே எடுத்துச் செல்லுங்கள் மற்றும் அவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

இதையும் படிங்க:  குழந்தைகள் படித்ததும் உடனே மறக்குறாங்களா? இந்த '1' டிப்ஸ்  ஃபாலோ பண்ணா மறக்காது!!

Train Travel With Kids In Tamil

உணவு

சில சமயங்களில் ரயிலில் விற்கப்படும் உணவுகள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போய்விடும். இதனால் குழந்தைகள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. எனவே  வீட்டில் சமைத்த உணவை உங்களுடன் எடுத்து வாருங்கள். அதை குழந்தைகளுக்கு கொடுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவார்கள். இதனால் நீங்களும் சங்கடமாக உணர மாட்டீர்கள்.

சுகாதார பாதுகாப்பு

குழந்தைகளுடன் ரயில் பயணத்தின் போது குளிர் அல்லது வெப்பத்திற்கு ஏற்ற ஆடைகளை உங்களுடன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏற்ற சமயத்தில் அவை உங்களுக்கு தேவைப்படும்.

Train Travel With Kids In Tamil

பாத்ரூம் பயன்படுத்தும் முறை

ரயில் பயணத்தின் போது குழந்தைகள் எப்படி  பாத்ரூமை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள் மற்றும் அவர்களுடன் நீங்கள் செல்ல மறக்காதீர்கள்.

ரயில் விதிவிலக்கு

ரயில் பயணத்திற்கு முன்பாக குழந்தைகளுக்கு ரயிலின் சில விதி விலக்குகளை சொல்லிக் கொடுங்கள். இது அவர்கள் பாதுகாப்பாக இருக்க உதவும்.

Latest Videos

click me!