Published : Nov 20, 2024, 10:49 AM ISTUpdated : Nov 20, 2024, 10:54 AM IST
Kitchen Sink Cleaning Tips : உங்கள் வீட்டுக்கு கிச்சன் சிங்கிள் நாத்தம் அடித்தாலோ அல்லது அடைப்பு ஏற்பட்டாலோ அதை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
கிச்சன் சிங்கில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை அடைப்பு மற்றும் துர்நாற்றம். உண்மையில் பாத்திரங்களை கழுவும் போது அல்லது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மீதமிருக்கும் உணவுகளை அப்படியே சிங்கில் போடுவதால் அடைப்பு ஏற்படுகிறது.
25
Kitchen Sink Cleaning Tips In Tamil
இந்த உணவுகள் கிச்சன் சிங்கின் குழாய் மற்றும் வடிகாலில் குவியத் தொடங்கும். இதை ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டால் கிச்சன் சிங்க் அடைப்பு ஏற்படுவது மட்டுமின்றி, துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் உங்கள் வீட்டு கிச்சன் சிங்கிலும் இப்படி அடுப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம், கிச்சன் சிங்கில் இருந்து வரும் துர்நாற்றம் மற்றும் அடைப்பை சுலபமாக நீக்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கிச்சன் சிங்கில் இருந்து வரும் துர்நாற்றம் மற்றும் அடைப்பை நீக்குவது எப்படி?
தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா - 1 கப்
சூடான நீர் - 1 கப்
வினிகர் - அரை கப்
எலுமிச்சை சாறு - 1 கப்
பயன்படுத்தும் முறை :
இதற்கு முதலில் சிங்கில் பேக்கிங் சோடாவை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதன் மேல் எலுமிச்சை சாறு சேர்த்து சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு வெள்ளை வினிகரை சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின் சூடான நீரை அதன் மேல் ஊற்றவும். இப்போது சிங்கில் இருக்கும் பைப்பை திறந்துவிடுங்கள். இப்படி செய்தால் சிங்கில் அடைப்பு பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி, துர்நாற்றமும் அடிக்காது.
55
Kitchen Sink Cleaning Tips In Tamil
கிச்சன் சிங்கிள் அடைப்பு மற்றும் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
- உங்கள் வீட்டு கிச்சன் சிங்கிள் அடைப்பு மற்றும் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க நீங்கள் பாத்திரங்களை கழுவும் போது மீதமுள்ள உணவுகளை கிச்சன் சிங்கிள் போடாமல் அதை குப்பை தொட்டியில் போடுங்கள்.
- அதுபோல மாதம் ஒரு முறை கண்டிப்பாக கிச்சன் சிங் பைப் மாற்றுங்கள். ஏனெனில் அதன் உள்ளே பாசி மற்றும் அழுக்குகள் குவிந்து இருக்கும். இதுதான் கிச்சன் சிங்கிள் அடைப்பு மற்றும் துர்நாற்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
- பாத்திரங்களை அவ்வப்போது உடனே கழுவி விடுங்கள். ரெண்டு மூன்று நாட்கள் வைத்து கழுவ வேண்டாம்.