மழைக்காலம் கோடை வெப்பத்திலிருந்து நம்மை தணிக்க வந்தாலும், கூடவே பல விதமான தொற்று நோய்களையும் கொண்டு வரும். இது தவிர இந்த சீசனில் வீட்டில் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக கொசுக்கள் நம்மை இரவு தூங்க விடாமல் தொந்தரவு செய்கின்றன. கொசுக்களை வீட்டில் இருந்து விரட்டுவது ரொம்பவே முக்கியம். இல்லையெனில் மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் வந்துவிடும்.
25
Mosquitoes And Garlic Spray In Tamil
இத்தகைய சூழ்நிலையில், கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பல முயற்சிகளை எடுத்தாலும் அவை அனைத்தும் தோல்வியடைகின்றன. எனவே, பூண்டை வைத்து கொசுக்களை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளன. அதை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.கொசுக்கள் உங்கள் வீட்டில் தங்காது. அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படுகிறது. தவிர இது பல உடல் நல பிரச்சினைகளையும் போக்கும். ஆனால் கொசுக்களயும் விரட்டுவதற்கு பூண்டை பயன்படுத்தலாம் தெரியுமா? உண்மையில் பூண்டில் இருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது எனவே அவை வீட்டிலிருந்து ஓடிவிடும். இப்போது வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
இதற்கு பூண்டை நன்றாக நசுக்கி அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீர் நன்றாக ஆறியதும் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இப்போது இந்த தண்ணீரை நீங்கள் மாலை அல்லது இரவு நேரத்தில் வீட்டில் தெளிக்கவும். இப்படி செய்வதன் மூலம் கொசுக்கள் வீட்டிற்குள் வராது ஓடிவிடும்.
55
Mosquitoes And Garlic Spray In Tamil
கொசுக்களை விரட்ட மற்றொரு வழிகள்:
- வீட்டில் கற்பூரத்தை எரித்தால் அதன் வாசனைக்கு கொசுக்கள் வீட்டில் இருந்து உடனடியாக ஓடிவிடும்.
- மலை வேளையில் வீட்டின் முன்பாக வேப்பிலைகளை எரித்தால் அதன் வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் வராது.
- அதுபோல கை கால்களில் கடுகு எண்ணெய் தடவினால் கொசுக்கள் கடிக்காது.
- துளசி வாசனைக்கு கொசுக்கள் வராது எனவே அவற்றை வீட்டில் வைக்கலாம்.
- எலுமிச்சை மற்றும் கிராம்பு கொசுக்களை விரட்டும். இதற்கு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் கிராம்புகளை சொருகவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.