உங்க BP-யை கண்ட்ரோல் செய்ய சூப்பர் டிப்ஸ்.. இந்த 8 உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!

Published : Mar 30, 2026, 11:18 AM IST

இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களில் உள்ள இரத்த அழுத்தம் தேவையை விட மிக அதிகமாகும். இதனை இரத்தக் கொதிப்பு நோய் என்று கூறுகிறோம். பி.பி-யை சரியான அளவில் வைத்துக்கொள்ள பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

PREV
18
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்
ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்க பொட்டாசியம் ஒரு அத்தியாவசிய தாது. பி.பி-யை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
28
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாதுளை ஜூஸ்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாதுளை ஜூஸ் ஒரு சிறந்த தேர்வு. உயர் ரத்த அழுத்தம் (hypertension) உள்ளவர்களுக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும். இதில் உள்ள பாலிஃபீனால்கள், ரத்தக் குழாய்களைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
38
தக்காளி ஜூஸில் பொட்டாசியம்
தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். தக்காளி ஜூஸில் பொட்டாசியம் மற்றும் லைக்கோபீன் அதிக அளவில் உள்ளன. லைக்கோபீன் என்பது 15 விதமான சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளைக் கொண்ட ஒரு தாவர நிறமி.
48
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கேரட்
கேரட்டில் பொட்டாசியம் மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி, மற்றும் ஈ கூட இருக்கிறது. இந்த வைட்டமின்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. கேரட் சாப்பிடுவது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
58
இளநீர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
இளநீரில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும்.
68
ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் ஹெஸ்பெரிடின், நரிருடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
78
பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் சேர்மங்கள்
பால் பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலம். நல்ல தூக்கத்தை மேம்படுத்தும் சில சேர்மங்களும் இதில் உள்ளன.
88
ரத்த அழுத்தத்தை குறைக்கும் அவகாடோ
அவகாடோவில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது ரத்தக் குழாய்களின் இறுக்கத்தைக் குறைத்து, சோடியம் அளவை சமநிலைப்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது அவகாடோ சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்த அபாயம் 17% குறையும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories