Cooling Plants: வீட்டை ஜில்லுனு வைக்கும் 6 செடிகள்: இந்த செடிகளை வீட்டில் வைத்தால் AC பில்லை பாதியாக குறைக்கலாம்.!

Published : Mar 29, 2026, 03:40 PM IST

Reduce Your AC Bill With These 6 Natural Cooling Indoor Plants : வெயில் காலம் வந்தாலே ஏசி பில் எகிற ஆரம்பித்துவிடும். ஆனால், சில இன்டோர் செடிகள் உங்கள் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

PREV
17
Indoor plants for summer

வெயில் காலம் வந்தாச்சு, வீடுகள்ல பேன், ஏசி ஓட ஆரம்பிச்சிடுச்சு. ஜில்லுனு காத்து முதல்ல நல்லா இருந்தாலும், கரண்ட் பில் எகிறும்போது டென்ஷன் ஏறும். இந்த கரண்ட் பில்லை பாதியாக்க, உங்க ரூம், லிவிங் ரூம்ல இந்த 6 செடிகளை வெச்சா போதும். குறைந்த பட்ஜெட்ல வாங்கி வைக்கக்கூடிய இந்த செடிகள், வீட்டைக் குளிர்ச்சியா வெச்சுக்கிறது மட்டுமில்லாம, ஒரு ஸ்டைலான லுக்கையும் கொடுக்கும். அந்த செடிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
பாம்பு கற்றாழை (Snake Plant)

பாம்பு கற்றாழை (Snake Plant) ரொம்ப எளிதா வளரக்கூடிய ஒரு இன்டோர் செடி. இதை பராமரிக்கிறதும் சுலபம். இது காற்றை சுத்தப்படுத்தி, ராத்திரி நேரத்துலயும் ஆக்சிஜனை வெளியிடும். இந்த செடியை வீட்ல வெச்சா, ரூம் வெப்பநிலை குறையும். இதை நீங்க தொட்டியிலயும் வளர்க்கலாம், தண்ணியிலயும் வெக்கலாம்.

37
சோற்றுக்கற்றாழை (Aloe Vera)

சோற்றுக்கற்றாழை (Aloe Vera) சருமத்துக்கு மட்டும் நல்லது இல்ல, வீட்டுச் சூழலை குளிர்ச்சியா வெச்சுக்கவும் உதவுது. இது காத்துல இருக்குற ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தி, வெப்பத்தைக் குறைக்கும். இதையும் பராமரிக்கிறது ரொம்ப ஈஸி. இது வீட்டு காத்தையும் சுத்தப்படுத்தும்.

47
அரேகா பாம் (Areca Palm)

அரேகா பாம் (Areca Palm) ஒரு நேச்சுரல் ஹியூமிடிஃபையர் மாதிரி செயல்படுது. இது காத்துல ஈரப்பதத்தை அதிகமாக்கி, சூட்டைக் குறைக்கும். இது இன்டோர் இடங்களுக்கு ரொம்ப ஸ்டைலான லுக்க கொடுக்கும். ஒரு பெரிய அரேகா பாம் செடியை நீங்க நர்சரியில இருந்து 250 ரூபாய்க்கு வாங்கிட்டு வரலாம்.

57
பீஸ் லில்லி (Peace Lily)

பீஸ் லில்லி (Peace Lily) ஒரு சிறந்த ஏர் ப்யூரிஃபையர் செடி. இதோட அடர்த்தியான பச்சை இலைகள், வீட்டு அறைக்கு ஒரு குளிர்ச்சியான உணர்வைக் கொடுக்கும். இதுல பூக்குற வெள்ளை நிறப் பூ, வீட்டு அழகை இன்னும் அதிகமாக்கும்.

67
மணி பிளான்ட் (Money Plant)

மணி பிளான்ட் ரொம்ப சுலபமா வளரும், காத்தையும் ஃபிரெஷ் ஆக்கும். இதை நீங்க சுவத்துல படரவிட்டோ அல்லது பாட்டில்ல வெச்சோ அலங்காரம் செய்யலாம். மணி பிளான்ட் பராமரிப்பும் சுலபம். மண்ணுல வெச்சு வளர்த்தா, வளர்ச்சி இன்னும் வேகமா இருக்கும். குறைஞ்ச உழைப்புல உங்க வீட்டை இத வெச்சு அழகா மாத்தலாம்.

77
ஃபெர்ன் (Fern)

ஃபெர்ன் (Fern) செடி காத்துல ஈரப்பதத்தை தக்கவெச்சு, சூட்டைக் குறைக்கும். இது லிவிங் ரூமுக்கு ஒரு ஃபிரெஷ் மற்றும் கூலான லுக்க கொடுக்கும். இந்த செடிகளை வீட்ல வெக்கும்போது, அது ஈரப்பதத்தை அதிகப்படுத்தி, வீட்டை இயற்கையா குளிர்ச்சியா வெச்சுக்கும். நல்ல காற்று சுழற்சியையும் இது உருவாக்கும்.

இந்த செடிகளை வீட்ல வெச்சா, ஏசியை ரொம்ப நேரம் ஓட்டாதீங்க. பகல்ல 2 மணி நேரம், ராத்திரி 2 மணி நேரம் ஓட்டிட்டு ஆஃப் பண்ணாலே போதும். இதனால கரண்ட் பில் நல்லாவே குறையும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories